பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்.? புதிய சிக்கலில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.!

Minister TM Anbarasan - PM Modi

TM Anbarasan – PM Modi : தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி சென்னையை அடுத்த பம்மலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், பிரதமர் குறித்து விமர்சித்து பேசியிருந்தார்.

Read More – மதுரை மக்களே ரெடியா.? சித்திரை திருவிழா முக்கிய தேதிகள் அப்டேட்ஸ்…

அமைச்சர் பேசுகையில், நாங்கள் எவ்வளவோ பிரதமரை பார்த்திருக்கிறோம். இந்த அளவுக்கு மட்டமான ஒரு பிரதமரை பார்த்ததியில்லை. திமுகவை யாராலும் அழிக்க முடியாது. அப்படி சொன்னவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்கள். நான் அமைச்சர் என்பதாக கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். இல்லையென்றால் பீஸ் பீஸ் ஆக்கி விடுவேன் என்ன பேசினார்.

Read More – பொன்முடிக்கு புதிய சிக்கல்… ஆளுநர் ரவியின் திடீர் டெல்லி பயணம்… 

இந்த பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா, அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் டெல்லி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சத்யா ரஞ்சன் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர்.

Read More – சித்தராமையா கருத்து எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது… இபிஎஸ் கடும் கண்டனம்!

அந்த புகாரின் அடிப்படையில் தா.மோ.அன்பரசன் மீது கலகம் தூண்டும் வகையில் பேசுவது, வெறுப்புத்தக்க பேச்சின் மூலம் வன்முறையை தூண்டுவது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA
Coimbatore Tidel Park