ஹெராயின் போதைப்பொருள் விற்ற 3 பேர் கைது.!

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஹெராயின், போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு  தகவல்கள் கிடைத்தது.

பள்ளிக்கரணை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது  கல்லூரி மாணவனிடம் இருந்து ஹெராயினை போலீசார் கைப்பற்றினர்.

பின்னர் வியாசர்பாடி எம்.கே.பி. நகரில் ஹெராயின் விற்ற 3 பேரை போலீசார்  கைது செய்தனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஹெராயின், போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு  தகவல்கள் கிடைத்தது.

இந்நிலையில்  தென் சென்னை போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி தலைமையிலான ஒரு தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது போலீசார் பள்ளிக்கரணை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது ஒரு கல்லூரி மாணவனிடம் இருந்து சிறிய பொட்டலத்தை போலீசார் பிரித்து பார்த்தபோது அதில் ஹெராயின் இருந்தது. உடனே அந்த கல்லூரி மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை மண்ணடியில் தனது நண்பன் ஒருவர்  கொடுத்ததாக கூறினார்.

பின்னர் போலீசார் அவரது நண்பரை பிடித்து விசாரித்தனர்.அதில் வியாசர்பாடி எம்.கே.பி. நகரில் போதைப்பொருட்கள் வாங்கியதாக கூறினார்.விரைந்து சென்ற போலீசார் வியாசர்பாடி எம்.கே.பி. நகரில் உள்ள வீட்டில் இருந்து 40 கிராம் எடை கொண்ட ஹெராயின் கைப்பற்றினார்கள்.

இதை பதுக்கி விற்ற மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த சபீர் அகமது (28),  தாரூல் இஸ்லாம்(26)  , ஜவாறிரூல் ஷேக்(22), ஆகியோரை போலீசார்  கைது செய்தனர்.