திருத்தணி நீதிமன்ற வளாகம் அருகே மகேஷ் என்பவர் கொடூரமாக ஓட ஓட விட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் உயிர் பிழைக்க அருகில் உள்ள உணவகத்தில் உள்ளே ஓடினார் அங்கும் விடாமல் துரத்தி மகேஷை வெட்டி வீசினர்.
unknown nodeஇதில் சம்பவ இடத்திலேயே மகேஷ் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸ் தனிப்படை அமைத்து விசாரித்தது. இதில், கைப்பந்து விளையாட்டின் பொது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. என தகவல் வெளியாகியது. குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கொலையாளிகள் விமல் ராஜ், கோபி ராஜ், ராஜ் குமார், அஜித் குமார் ஆகிய நான்கு பேரும் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தனர்.