சென்னை :ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் அதிகரித்த நிலையில், திலகபாமா அன்புமணிக்கு ஆதரவாக இருந்தார். இந்த நிலையில், பாமக பொருளாளர் பதவியிலிருந்து திலகபாமா நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். திலகபாமாவுக்கு பதிலாக சையத் மன்சூரை பொருளாளராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பில், பாமக தலைவர் என தனது பெயரை ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார். அடுத்த சில நிமிடங்களிலே அன்புமணியும், தலைவர் என குறிப்பிட்டு புதிய அறிக்கையை வெளியிட்டார். அதில், பாமக பொதுக் குழுவால் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டவர் திலகபாமா, அவர் பொருளாளராக தொடர்வார், அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
unknown node