மாணவியின் உடல் இன்று மறு பிரேத பரிசோதனை – உச்சநீதிமன்றத்தை நாடும் தந்தை!

Default Image

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று மாணவி உடல் மறு பிரேத பரிசோதனை.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், மாணவியின் உடலை மறு கூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மாணவியின் உடலை 3 மருத்துவர்கள் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் உடல் மறுகூராய்வை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் தந்தை மற்றும் தனது வழக்கறிகருடன் உடல் மறு கூராய்வு போது உடனிருக்க அனுமதி அளிக்கப்பட்டு நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து, மாணவி மறு உடல் கூராய்வில் தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என்ற தந்தையின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்தது. தனி நீதிபதி உத்தரவில் மேல்முறையீடு வேண்டும் என்றால் உச்சநீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என்றும் தெரிவித்ததை தொடர்ந்து, தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்கும் வரை உடல் மறு கூராய்வு நடத்தக்கூடாது என உயிரிழந்த மாணவியின் தந்தை மீண்டும் முறையீடு செய்திருந்தார்.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளதால் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என தந்தை முறையீட்டு மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது,  மாணவியின் உடல் மறு கூராய்வுக்கு பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது என நீதிபதி சதீஷ்குமார் திட்டவட்டமாக கூறினார். ஏற்கனவே, பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது, வேண்டுமானால் சிபிசிஐடிக்கும், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு மனு அளியுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று தனியார் பள்ளி மாணவி உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. மருத்துவர்கள் ஜூலியானா ஜெயந்தி,  கீதாஞ்சலி மற்றும் கோகுலரமணன் மறு பிரேத பரிசோதனை செய்கின்றனர். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி தடயவியல் துறை நிபுணர் சாந்தகுமார் முன்னிலையில் நடைபெற உள்ளது. மறு பிரேத பரிசோதனை நடைபெறுவதையொட்டி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்யும் குழுவில் தங்கள் தரப்பு மருத்துவரையும் சேர்க்க வேண்டும் என்று மாணவியின் தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார். மனுவை இன்றே அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையிடவும் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi