போலீஸ் பாதுகாப்புடன் கனியாமூர் தனியார் பள்ளியில் 68 நாட்களுக்குப் பிறகு மறு சீரமைப்பு பணிகள் தொடக்கம். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜூலை 13-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்பட்டது. மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, நீதி கேட்டு தொடர்ந்து மாணவியின் தாயார் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அதன்பிறகு ஜூலை 17-ஆம் தேதி பள்ளி முன் […]
கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி வன்முறை தொடர்பான வழக்கில் பட்டதாரி இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி வளாக வன்முறை சம்பவத்தின் போது காவல்துறையினரை தாக்கி, வாகனங்களுக்கு தீ வைத்ததாக கூறி கைது செய்யப்பட்ட பட்டதாரி இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 4 வாரங்களுக்கு தினமும் 2 வேளை கல்பாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் பட்டதாரி இளைஞர் ஆகாஷ் என்பவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் காவல்துறை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் மரணம் தொடர்பாக நடந்த கலவரத்தை விசாரிக்க 18 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். 6 டிஎஸ்பி-க்கள், 9 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 3 சைபர் கிரைம் பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். மேலும், சின்னசேலம் போலீசார் பதிவு செய்த 3 குற்ற வழக்குகள், அது தொடர்பான ஆவணங்கள் இந்த குழுவிடம் […]
மாணவியின் உடலை மதியம் 2 மணிக்குள் பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் என தகவல். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தாக கூறப்படுகிறது. மறு பிரேத பரிசோதனை முடிந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவியின் உடலை மதியம் 2 மணிக்குள் பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் என தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடல் மறுகூராய்வு செய்யப்பட்டு தற்போது […]
கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பான தந்தையின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை தொடர்பாக தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவில் 3 மருத்துவர்கள் மறு பிரேத பரிசோதனை செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடனிருக்க வேண்டும் என்று தங்கள் மருத்துவரை சேர்க்கும் வரை மறுபிரேத பரிசோதனை நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இதனைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூராய்வை நிறுத்தி வைக்க உத்தரவிட […]
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார் பணியிடை மாற்றம். தனியார் பள்ளி மாணவி மரணம், இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தின் எதிரொலியாக கள்ளக்குறிச்சி எஸ்பிஐ செல்வகுமார் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக இருந்த பகலவன் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய எஸ்பியாக நியமனம் செய்து உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். […]
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை தொடங்கியது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மரணமடைந்த மாணவியின் உடல் மறுகூராய்வு பணி தொடங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவி உடல் பிற்பகல் ஒரு மணிக்கு மறுகூராய்வு செய்யப்படும் என கூறியிருந்த இருந்த நிலையில், தற்போது தான் தொடங்கியுள்ளது. மருத்துவர்கள் ஜூலியானா ஜெயந்தி, கீதாஞ்சலி மற்றும் கோகுலரமணன் மறு பிரேத பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை […]
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை பெற்றோர் இல்லாமல் மறுகூராய்வு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவி உடல் பிற்பகல் ஒரு மணிக்கு மறுகூராய்வு செய்யப்படும் என மருத்துவமனை டீன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மறுகூராய்வு செய்வது தொடர்பான நோட்டிஸ், மாணவியின் பெற்றோர் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, மறு உடற்கூராய்வு செய்யும் இடத்தில் பெற்றோர் இருக்கலாம் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் மறு உடற்கூராய்வை பெற்றோர் இல்லாமலே நடத்த சென்னை […]
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூராய்வுக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு. மறுபிரேத பரிசோதனை விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவில் 3 மருத்துவர்கள் மறு பிரேத பரிசோதனை செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடனிருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுக்க தலைமை நீதிபதி அமர்வில் மாணவியின் தந்தை முறையிட்டார். இதனைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூராய்வை இன்று நிறுத்தி வைக்க உத்தரவிட […]
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம், வன்முறை தொடர்பாக காணொளி மூலம் முதலமைச்சர் ஆலோசனை. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம், வன்முறை தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், உள்துறை செயலர், தலைமை செயலாளர், கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கள்ளக்குறிச்சியில் ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று மாணவி உடல் மறு பிரேத பரிசோதனை. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், மாணவியின் உடலை மறு கூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மாணவியின் உடலை 3 மருத்துவர்கள் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் உடல் மறுகூராய்வை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் தந்தை மற்றும் தனது வழக்கறிகருடன் உடல் மறு […]
மாணவி மரண விவகாரத்தில் கைதான கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு. கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்ற வந்த மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்தது தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியர் ஹரிப்ரியா மற்றும் கணித ஆசிரியர் கிருத்திகா ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மாணவி உயிரிழந்தது தொடர்பாக […]
கலவரத்துக்கு காரணமான அனைத்து குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என அமைச்சர் எ.வ.வேலு பேட்டி. கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. மாணவி மர்ம முறையில் உயிரிழந்ததுக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், அந்த தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. மாணவி மர்ம மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, […]
மறு பிரேத பரிசோதனை செய்யும் குழுவில் தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என தந்தை மீண்டும் முறையீடு. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மாணவியின் உடலை மறு கூராய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. மாணவியின் உடலை 3 மருத்துவர்கள் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் உடல் மறுகூராய்வை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் தந்தை மற்றும் தனது வழக்கறிகருடன் […]
தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்ட நிலையில், நாளை முதல் அனைத்து பள்ளிகளும் இயங்கும் என அறிவிப்பு. தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரத்தில், அந்த தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. இதனை எதிர்த்து, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டன. இருப்பினும், பள்ளிகளை அரசு அனுமதி இன்றி மூடக்கூடாது என்ற உத்தரவால், பெரும்பாலான பள்ளிகள் இன்று […]