நம்பர் ஒன் இலக்கை நிச்சயம் அடைய முடியும் – முதலமைச்சர் ஸ்டாலின்

திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அனைத்துத்துறை செயலர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.

திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அனைத்துத்துறை செயலர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை முதலமைச்சர் முக ஸ்டாலின் அனைத்துத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது.

அப்போது முதலமைச்சர் பேசுகையில், சில துறைகளில் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த செயல்பாடு ஏற்படாமல் இருப்பதாக அறிகிறேன். இது எங்கும் எப்போதும் எந்த துறைகளிலும் எந்த சூழலிலும் ஏற்பட கூடாது. அமைச்சர்கள், துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட நிர்வாகம் ஒரே நேர்கோட்டில் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், அனைத்து செயல்பாடுகளும் ஒரே நேர்கோட்டில் சென்றால் அனைத்து துறைகளும் நம்பர் ஒன் என்ற இலக்கை நிச்சயமாக அடைய முடியும். மக்கள் நலன் கருதி நீங்கள் வைத்துள்ள உங்களின் கனவு திட்டங்களையும் அரசுக்கு சொல்லி பயன்படுத்த முனைய வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கிய முதல்வர் ஸ்டாலின், திட்டப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பித்தார்.