திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அனைத்துத்துறை செயலர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு. சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை முதலமைச்சர் முக ஸ்டாலின் அனைத்துத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது. அப்போது முதலமைச்சர் பேசுகையில், சில துறைகளில் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த செயல்பாடு ஏற்படாமல் இருப்பதாக அறிகிறேன். இது எங்கும் எப்போதும் எந்த துறைகளிலும் […]
ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஆஜராக உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், ராமநாதபுரம் ஆட்சியர் நேரலில் ஆஜராக உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டால் அதை கையாளும் நிலை இதுதானா? நிர்வாக காரணங்களால் ஊரக வளர்ச்சித்துறை செயலர் ஆஜராகவில்லை என்ற விளக்கத்திற்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சாதாரண நபர்கள் ஆஜராகவில்லை எனில் […]
பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் சர்ச்சை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை நிச்சயம். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதுகலை தேர்வில் வினாத்தாளில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலரும் கண்டங்களை தெரிவித்தனர். இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் சர்ச்சை விவகாரத்தில் தவறிழைத்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் உயர்கல்வித்துறை உறுதி அளித்துள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் […]
இருவர் மீதும் கட்சி ரீதியான நடவடிக்கை மட்டும் எடுத்து பா.ஜ.க. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலக்கூடாது என திமுக அறிக்கை. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது. இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில், இஸ்லாமிய நாடுகள் கண்டனங்களை தெரிவித்து மன்னிப்பு […]
பரப்பான சூழ்நிலையில் அதிமுக செயற்குழுக்கூட்டம் நாளை கூடுகிறது. இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தற்போது தயாராகி வருகின்றது. இந்நிலையில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. இப்போதே தேர்தல் பணியை தொடங்கி உள்ளது. இதில் முதல் கட்டமாக கட்சியின் செயற்குழுவை நாளை (திங்கட்கிழமை) அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூட உள்ளது. காலை 9.45 மணிக்கு செயற்குழு நடக்கிறது. […]