அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர்ஆலோசனை

Tamil Nadu Chief Secretary Shanmugam is consulting with all District Collectors due to new form of corona virus.

தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

முதலில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது அந்த தாக்கம் குறைந்து வருகிறது.இதனைக்கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டன.இதற்கு இடையில், உருமாறி உள்ள புதிய வகையான கொரோனா வைரஸ் எனவும், இது இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் இந்த வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறதாக செய்திகள் வெளியாகி வருகிறது.இதனால் உலக நாடுகள் மீண்டும் பீதியடைந்துள்ளன.

ஆகவே பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது.வைரஸ் பரவல் இருப்பதால் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.ஏற்கனவே பிரிட்டன் விமானங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக  ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.