தமிழக முதல்வர் அடிக்கல் நாயகனாக தான் உள்ளார் – கனிமொழி எம்பி

DMK MP Kanimozhi has said at a function in Sivakasi that the Chief Minister of Tamil Nadu is the foundation man.

தமிழக முதல்வர் அடிக்கல் நாயகனாக தான் உள்ளார் என்று திமுக எம்பி கனிமொழி, சிவகாசியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்தநாடு சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால். அதற்கான பிரச்சாரங்களை அனைத்து கட்சிகளும் தீவிரமாக தொடங்கிவிட்டன. அதன்படி, அண்மையில் அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி சேலத்தில் தனது முதல் தேர்தல் பரப்புரையை தொடங்கினர். எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் மாவட்டங்களுக்கு சென்று பரப்புரை ஆற்றி வருகிறார். மேலும் நீற்று முதல் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

அந்தவகையில், திமுக கனிமொழி எம்பி ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், விருதுநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட சிவகாசியில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, தமிழக முதல்வர் அடிக்கல் நாயகனாக தான் உள்ளார் என்றும் மக்கள் பணி செய்த பெருமை முதல்வருக்கு கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.