நாடித்துடிப்பை உணர்ந்து பட்ஜெட் இருக்கும்....அமைச்சர் ஜெயக்குமார் கருத்து...!!

தமிழக அரசின் பட்ஜெட் நாளை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கின்றது.தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த பட்ஜெட்_டில் பல்வேறு நல திட்டங்கள் இடம் பெறலாம்

தமிழக அரசின் பட்ஜெட் நாளை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கின்றது.தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த பட்ஜெட்_டில் பல்வேறு நல திட்டங்கள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இந்நிலையிலியில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களிடம் பட்ஜெட் குறித்து பல்வேறு அம்சங்களை கூறினார்.

இதையடுத்து சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியளர்களிடம் பட்ஜெட் குறித்து கூறுகையில் , அம்மா வழியில் நடைபெறும் இந்த ஆட்சி மக்களுக்கு தேவையான எல்லா திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட்து. மேலும் மக்களின் பல்வேறு கனவு_களை நிறைவேற்றி  வெள்ளம் , புயலை சமாளித்து முதல்வர் செயல்பட்டதால் மக்களுக்கு அதிமுகவின் அரசின் மீதான செல்வாக்கு குறையவில்லை. அந்தவகையில் மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து தமிழக பட்ஜெட் இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.