ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

Teachers must be vaccinated against corona by April 30 - School Education Department order.

கொரோனா பரவல் காரணாமாக ஆசிரியர்கள் அனைவரும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையானது அதிகமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக, ஏற்கனவே பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.ஆனால்,அதே நேரத்தில் பள்ளி ஆசிரியர்கள் மட்டும் தொடர்ந்து பள்ளிக்கு வருகைப் புரிந்து மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பிற பணிகளையும் கவனித்துக் கொள்கின்றனர்.மேலும்,தன்னார்வ அடிப்படையில் பல ஆசிரியர்கள் கொரோனா தடுப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,45 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்.மேலும்,தடுப்பூசி போட்டுக்கொண்டது குறித்த விவர அறிக்கையை பள்ளி இயக்குநகரத்து அனுப்ப வேண்டும் என்றும்,கொரோனா தடுப்புப் பணிகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.