தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வை நடத்துவதற்கு மாவட்ட அளவில் கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த நிலையில் பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க, மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித் துறையில் மாநில அளவில் பணியாற்றும் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்டோர் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடர்: வெளிநாட்டில் இருந்து காணொளி வாயிலாக […]
அக்டோபர் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து விண்ணப்பிப்பதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து வழங்குவதற்காக நடப்பு ஆண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 2023 முதல் இக்கல்வியாண்டிற்கான உயர்கல்வி நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 2023 அக்டோபர் மாதத்தில், […]
தொலைதூர கல்வி நிறுவங்களில் பயின்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நடைமுறையை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுத்தியுள்ளது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் நேரடி கல்லூரி வகுப்பில் பயிலாதவர்கள் பெரும்பாலானோர் இருக்கிறார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது . இதுகுறித்து மேலும் கூறுகையில் , தொலைதூர கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் பெரும்பாலும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக பயின்று வருகின்றனர். இந்த நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும். தொலைதூர கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் ஆசியராக பணியாற்ற தகுதிஇல்லாதவர்கள். அதற்கு […]
தமிழ்நாட்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகின்ற மே 6,9 ஆகிய தேதிகள் முதல் மே 30,31 ஆகிய தேதிகள் வரை நடைபெறும் எனவும்,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி முடிவடையும் என்றும் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இறுதித்தேர்வு இல்லை: இந்நிலையில்,தமிழ்நாட்டில் […]
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம்? என்ன படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது? என்பதற்கான ஆலோசனை மையம் அமைக்க அரசாணை வெளியீடு. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 9 – 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்குவதற்கு ஆலோசனை மையம் அமைக்க நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்களை கொண்டு தொடர் நெறிப்படுத்தும் முறை, ஆலோசனை மையம் மற்றும் தொடர் […]
சென்னை:தமிழகத்தில் நாளை ( 22-ம் தேதி ) ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகையான பள்ளிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்,ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,நாளை (22.01.2022) ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக,பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் […]
சென்னை:தமிழகத்தில் வரும் சனிக்கிழமை ( 22-ம் தேதி ) ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக பள்ளிக் கல்வி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகையான பள்ளிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,வருகின்ற சனிக்கிழமை 22.01.2022 ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. […]
சென்னை:10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக,1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து முன்னதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.ஆனால்,10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அரசு தெரிவித்தது. […]
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறாத போதும்,கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் (3-ஆம் தேதி) தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனிடையே கொரோனா […]
ஒமைக்ரான் தொற்றானது பரவாமல் தடுக்க,பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவை பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ளது. உலகின் சில நாடுகளில் ஒமைக்ரான் பரவிய நிலையில், வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த இரண்டு பேருக்கு இத்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,தமிழக பள்ளிகளில் ஒமைக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொடர்பான அரசின் அனைத்து வழிகாட்டுதல்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும்,1 ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுழற்சி முறையில் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை […]
பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நிரந்தர முடக்கம் அடைந்த பெற்றோர்,விபத்தில் இறந்த தாய் அல்லது தந்தை உள்ளிட்ட பெற்றோரை இழந்த பள்ளி மாணவ,மாணவிகளின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும்,இந்த உதவித்தொகையப் பெற மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக,இத்திட்டத்தில் பயனடையும் மாணவ – மாணவியர் தற்போது வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்றால், தற்போது […]
சென்னையில் மக்கள் தங்குவதற்கு ஏதுவாக பள்ளிகளை திறந்து வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால்,பாதிக்கப்பட்டுள்ள மக்களை தங்க வைக்க ஏதுவாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளை திறந்து வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி வளாகத்துக்குள் தண்ணீர் தேங்காமல் இருப்பதையும் சுற்றுச்சுவர்கள், கட்டடங்கள் பாதிக்கப்படாமலும், மின் இணைப்பு சரியாக இருப்பதையும் உறுதிப்படுத்தவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]
கல்வித்துறை வரலாற்றில் முதன்முறையாக மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு. பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வரும் 12-ம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்டக் கல்வி அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வு பணிமூப்பு நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், மாவட்ட கல்வி அலுவலர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் நாளில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த […]
தமிழகத்தில் “வீடு தேடி பள்ளிகள்” என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தவுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இந்த நிலையில்,தமிழகத்தில் உள்ள மழலையர் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை போக்க வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் புதிய திட்டத்தை பள்ளிக் […]
கொரோனா சூழல் கருதி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில்,கொரோனா சூழல் கருதி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.அதன்படி, 1 முதல் இரண்டாம் வகுப்புக்கு – 50% பாடங்கள் குறைப்பு. 3 முதல் 4 ஆம் […]
தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் 40 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் முதல் தவணையில் 40 சதவீதமும், 2 ம் தவணையில் 35 சதவீதம் என 75 சதவீதம் கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாா் உத்தரவிட்டுள்ளார். மேலும்,இது தொடர்பாக,அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்,மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆகியோருக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், “கொரோனா இரண்டாவது […]
கொரோனா பரவல் காரணாமாக ஆசிரியர்கள் அனைவரும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையானது அதிகமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, ஏற்கனவே பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.ஆனால்,அதே நேரத்தில் பள்ளி ஆசிரியர்கள் மட்டும் தொடர்ந்து பள்ளிக்கு வருகைப் புரிந்து மாணவர் சேர்க்கை […]
கல்வி அலுவலங்களில் சுதந்திர தினவிழாவை எளிமையாக கொண்டாட வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், கல்வி அலுவலங்களில் சுதந்திர தினவிழாவை எளிமையாக கொண்டாட வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், […]
பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்பும் வகையில் 7 பேருக்கு பதவி உயர்வு வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர், கள்ளக்குறிச்சி முதன்மைக் கல்வி அலுவலராகவும், சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் மதன்குமார், ராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலராகவும், ராமநாதபுரம் மாவட்டம் கல்வி அலுவலர் பாலதண்டபாணி, தேனி முதன்மைக் கல்வி அலுவலராகவும், காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி, சென்னையில் உள்ள தொடக்க கல்வி இயக்ககத்தின் […]