#BREAKING : தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Tamil Nadu Chief Minister edappadi palanisamy extends general Covid19 lockdown in the state till December 30th

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு என முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.நோய்க்கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.ஆனால் இதற்கு இடையில் வரும் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31 -ஆம் தேதி வரை பின்பற்றக் கூடிய புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதாவது,வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு, கட்டுப்பாட்டு பகுதிகள் மாவட்ட அதிகாரிகளால் கவனமுடன் வரையறுக்கப்படுவதை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்ய வேண்டும்.இந்தக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆகவே டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில்தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

unknown node