தமிழகத்தில் கொரோனா சிகிச்சை சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது -மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்  பாராட்டு

Tamil Nadu government deserves our highest appreciation for good work t -Union Health Minister Harsh Vardhan

தமிழக சுகாதாரத்துறையின் பணிகளுக்கு முதல்வரிடம் பாராட்டு தெரிவித்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் இன்று  கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஆகவே  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று  தமிழகம் வந்துள்ளார்.சென்னை பெரியமேட்டில் உள்ள மருந்து பரிசோதனை ஆய்வக கிடங்கில் வைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பார்வையிட்டார். பின்புதமிழக முதலமைச்சர்  பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.

ஆலோசனைக்குப் பின் சென்னையில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கொரோனா தடுப்பூசி ஒத்திகை 3 மாநிலங்களில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.தமிழக சுகாதாரத்துறையின் பணிகளுக்கு முதல்வரிடம் பாராட்டு தெரிவித்தேன்.கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.தமிழக அரசும் ,சுகாதாரத் துறையும்  செய்து வரும் பணிகள்  உயர்ந்த பாராட்டுக்கு தகுதியானவை என்று தெரிவித்துள்ளார்.