மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த தமிழகம், கொரோனா தடுப்பூசிகளை வீணடித்ததில் முதலிடம் என உதயநிதி ஸ்டாலின் விமர்சனம். மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசியை வீண் செய்த மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆர்டிஐ தெரிவித்திருந்தது. அதாவது, நாடு முழுவதும் மொத்தமாக 23% தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டுள்ளதாகவும், இதில் தமிழகத்திற்கு கடந்த 11-ம் தேதி வரை வழங்கப்பட்ட 54,28,950 தடுப்பூசிகளில் 12.10% தடுப்பூசிகளை வீணாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் விமர்சனம் செய்து […]
தமிழக சுகாதாரத்துறையின் பணிகளுக்கு முதல்வரிடம் பாராட்டு தெரிவித்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஆகவே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று தமிழகம் வந்துள்ளார்.சென்னை பெரியமேட்டில் உள்ள மருந்து பரிசோதனை ஆய்வக கிடங்கில் வைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பார்வையிட்டார். பின்பு தமிழக முதலமைச்சர் பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன். ஆலோசனைக்குப் பின் சென்னையில் மத்திய […]
கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கும் இந்தியாவின் முடிவை உலக சுகாதார அமைப்பு (WHO) வரவேற்றுள்ளது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு, ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள மற்றோரு தடுப்பூசி ஆகிய 3 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் இறுதிக்கட்டத்தை எட்டியது. ஆகவே அவசர கால பயன்பாட்டிற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர மத்திய அரசுக்கு, மருந்து கட்டுப்பாட்டு […]
கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டு ஒப்புதலுக்கான சீரம் நிறுவனத்தின் கோரிக்கை இன்று பரிசீலிக்கப்பட உள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான விண்ணப்பம் இன்று நிபுணர் குழுவால் பரிசீலிக்கப்படும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசியை கோவிஷீல்ட் என பெயரிடப்பட்ட அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகரிக்க இங்கிலாந்து அரசு மருந்துகள் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பின் (எம்.எச்.ஆர்.ஏ) அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை வழங்கியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சீரம் நிறுவனம் இந்தியாவில் கோவிஷீல்டுக்கான சோதனைகளை […]
கொரோனா வைரசுக்கு விரைவான மற்றும் மலிவான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் பாதிப்பை கண்டுள்ளது. இதற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில், சுமார் 30க்கும் மேற்பட்ட முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா, […]
இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கொரோனாவுக்கு தடுப்பூசி உருவாக்கி குரங்குகளுக்கு சோதனை நடத்தியதில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. உலக முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் இதுவரை உலகளவில் 46,28,824 பேர் பாதிக்கப்பட்டு, 3,08,655 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா தொற்றுநோய்க்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, அதே நேரத்தில் உலகமெங்கும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் மட்டும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு […]