நடிகர் ரஜினிகாந்த் இன்று அவர் தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறையில் இருக்கும் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சினிமா பிரபலங்களில் தனுஷ், குஷ்பூ, கமல்ஹாசன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதைப்போல அரசியல் தலைவர்களை பொறுத்தவரையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்திற்கு சமூக வலைத்தளங்களின் மூலம் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து – கமல்ஹாசன்!
அவர்களை தொடர்ந்து தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்திற்கு தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “அன்பிற்கினிய நண்பர் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த்அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்” என கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு முன்பாகவே மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்தை தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
unknown nodeStalin congratulated Rajinikanth [file image]
