திடீர் உடல்நலக் குறைவு! அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
திடீர் உடல்நலக்குறைவுக் காரணமாக தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி : தமிழக நீர்வளத்துறை அமைச்சராக உள்ள துரைமுருகன், வயது முடித்தீர்வு காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது மீண்டும் அவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக துரைமுருகனுக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால், அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படும் போதெல்லாம் துரைமுருகன் மருத்துவமனைக்கு சென்று தனது உடல்நிலையை பரிசோதித்து கொண்டிருந்தார்.
அதன்படி, சமீபத்தில் கூட அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார். இப்படி இருக்கையில், வேலூரில் இருந்து சென்னைக்கு திரும்ப இருந்த போது அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனைக் கண்டு அவரது அருகில் இருந்த ஆதரவாளர்கள் உடனடியாக அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.