சென்னை : தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக வெள்ளமும் பல இடங்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. 18-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை தொடர்ச்சியாக பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அலர்ட் கொடுத்திருந்தது. குறிப்பாக, டிசம்பர் 18-ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் […]
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை மும்மரமாகச் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று வேலூர் மாவட்டத்தின் காட்பாடி தொகுதியில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் தி.மு.க தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன் தன்னை கொல்ல வந்தார்கள் என்றால் கூட அவர்களை […]
திருச்சி : தமிழக நீர்வளத்துறை அமைச்சராக உள்ள துரைமுருகன், வயது முடித்தீர்வு காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது மீண்டும் அவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக துரைமுருகனுக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால், அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படும் போதெல்லாம் துரைமுருகன் மருத்துவமனைக்கு சென்று தனது […]
சென்னை : துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர் அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது என நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அமைச்சர் துரைமுருகன் பற்றி பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. விழாவில் பேசிய அவர் ” ஒரு கட்சியில் தலைவர் மறைந்த பிறகு […]
சென்னை : அமைச்சர் துரைமுருகன் பிரபல யூடியூபரான ஹர்ஷா சாயிடம் உதவி கேட்டு கமெண்ட்ஸ் செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நக்கல் நையாண்டி எல்லாம் நமக்கு கைவந்த கலைப்பா, என்ற கோணத்தில் பிரபல யூடியூபரின் வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ளார் அமைச்சர் துரைமுருகன். அப்படி அவர் செய்துள்ள சம்பவம் தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அமைச்சர் துரைமுருகன் எப்போதுமே தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு மீடியா வெளிச்சம் பார்க்காமல் நகைச்சுவையாக பதில் கொடுப்பதில் வல்லவர். அவர் அப்படி பதில் […]
சென்னை : விவசாயிகளின் பல ஆண்டுகால கனவாக இருந்த ‘அத்திக்கடவு- அவினாசி’ திட்டத்தை சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைத்தார். திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் கோவை, ஈரோடு, திருப்பூர், மாவட்டங்களில் 24 ஆயிரத்து 468 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், ரூ. 1916.41 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தினை சென்னையில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு […]
ஈரோடு : பவானி சாகர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வறட்சி உள்ள நீர் நிலைகளுக்கு செல்லும் வகையில், அங்குள்ள விவசாயிகள் பயன்பெற அறிமுகம் செய்யப்பட்ட திட்டமே அத்திக்கடவு – அவிநாசி திட்டம். தொடர் உண்ணாவிரத போராட்டம் : இந்த திட்டத்தை விரைவில் செய்லபடுத்தி விடுவோம் என அவ்வப்போது தமிழகஅமைச்சர்கள் கூறி வருவதாகவும், ஆனால் இன்னும் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை என்று கூறியும் பாஜக […]
துரை முருகன் : திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அமைச்சர் துரை முருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்ட நிலையில், திமுக சார்பாக நின்ற அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தார். அவரை தொடர்ந்து பாமக சார்பில் நின்ற சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். அதன் பிறகு 3-வது இடத்தில் நாதக […]
சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர், வழக்கறிஞர் அமைப்புகள் தங்கள் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றன. ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட சட்டதிருத்தத்தின் படி, இந்தியத் தண்டனைச் சட்டத்தை (IPC) பாரதிய நியாய […]
சென்னை திமுக வடக்கு மாவட்ட செயலாளராக ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ மற்றும் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக வீ.ஜெகதீசன் ஆகியோரை நியமித்து அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். READ MORE- ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு வெகுமதி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்! இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்” சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் த.இளையஅருணா அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக திரு.ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ.,(82/பி முதல் பிரதான சாலை, திருவள்ளூவர் நகர், கொடுங்கையூர், சென்னை-118) […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அரசியல் கட்சிகள் இடையே சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க நாடாளுமன்ற ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி […]
நீர்நிலைகளை அசுத்தப்படுத்தினால் உடனே கைதுசெய்யப்படுவீர்கள் என அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டி அசுத்தப்படுத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளார். நீர்நிலைகளை அசுத்தப்படுத்துவது மிகப்பெரிய குற்றம் ஆகும். ஆகையால் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இதனை தடுக்க குற்றம் செய்பவர்கள் கடுமையான சட்டத்தால் தண்டிக்க படவேண்டும் என்றும் கூறியுள்ளார். நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினாலோ, அசுத்தம் செய்தாலோ தனக்கு ஒரு போன் செய்தால் போதும் […]
உச்சநீதிமன்றம் வழங்கிய இடஒதுக்கீடு குறித்த தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என திமுக அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த உயர் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்வு, மத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் தீர்ப்பு வழங்கினர். இதில் […]
ஷட்டர் பழுதடைந்த பாலக்காடு, பரம்பிக்குளம் அணையை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘ அணையில் இருந்து நீர் வெளியேறுவதை பார்க்கையில் மனம் வேதனைப்படுகிறது.’ என குறிப்பிட்டார். கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்திருக்கும், பரம்பிக்குளம் அணை தான் கேரள மாநிலம் பாலகாடு, திருசூர் உட்பட தமிழகத்தில் கோவை சுற்றுவட்டார பகுதிக்கும் நீர் ஆதாரமாக திகழ்கிறது. அந்த பரம்பிக்குளம் அணையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் தண்ணீர் திறக்கும் மதகு (ஷட்டர் செயின்) பழுதடைந்த காரணத்தால், […]
தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் அணை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் தமிழகம், கர்நாடகம் இடையே உரிய முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து சர்ச்சை நிலையே நீடித்து வருகிறது. மேகதாது என்ற இடத்தில் புதிய ஆணை கர்நாடக அரசு முடிவு செய்தது. இதனால், காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டக்கூடாது என கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. சமீபத்தில்,மேகதாதுவில் புதிய […]
போக்குவரத்து கழக நடத்துனர்கள் பற்றி பேசியதை அமைச்சர் துரைமுருகன் திரும்பப்பெற வேண்டும். தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2-கட்டமாக நடைபெற்றள்ளது. இதனால், அனைத்து கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் பேசியபோது, அரசு டவுன் பேருந்துகளில் இலவச பயணம் செய்யும் பெண்களை, கண்டக்டர்கள் தரக்குறைவாகப் பேசினால் அவர்களைத் தாக்குங்கள் என பேசினார் என […]
புதுச்சேரி பேரவைக்கு தேர்வானவர்கள் பதவியேற்கும் முன்பே மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்திருப்பது கண்டனத்துக்குரியது என துரைமுருகன் தெரிவித்துள்ளார். 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களையும் கைப்பற்றி புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது. இதற்கிடையில், புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. அந்த 3 நியமன எம்.எல்.ஏக்களும் பாஜகவை சேர்ந்தவர்கள், இதனால், தற்போது […]
காட்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராமு 1,309 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனும், அதிமுக சார்பில் ராமு போட்டியிட்டனர். காட்பாடி தொகுதி இரண்டாவது சுற்றில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 5,609 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராமு 6,918 வாக்குகளும் பெற்றுள்ளனர். இரண்டாவது சுற்றில் துரைமுருகனை விட அதிமுக வேட்பாளர் ராமு 1,309 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.
மார்ச் 2 முதல் 6 ஆம் தேதி திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும் என்று திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் – தேர்தலுக்கு போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் செலுத்தியவர்களை கழகத் தலைவர் அவர்கள் 2-3-2021 முதல் 6-3-2021ஆம் தேதி வரை, பின்வரும் மாவட்ட வாரியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் – வெற்றி […]
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 7-ஆம் தேதி சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ திடலில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.