சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

வட தமிழக கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

balachandran weather rain

சென்னை :வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் பேட்டியளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே சுமார் 880 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும். இதன் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

டெல்டா மாவட்டங்களுக்கு நாளை அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  அதைப்போல, நாளை மறுநாள் விழுப்புரம், புதுக்கோட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவம்பர் 28-ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் 27, 28-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

குமாரிகடல் மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதியில் அடுத்த 5 நாட்களுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் கடவுளுக்கு செல்லவேண்டாம்” எனவும் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.