“ஆட்சி கவிழ்கிறது “அரண்டு போன எடப்பாடி” “முக.ஸ்டாலின் , தினகரன் , கருணாஸ் கூட்டு..!!
நடிகர் கருணாஸைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
நடிகர் கருணாஸ் சசிகலாவைச் சந்தித்த பிறகே இப்படி ஆக்ரோஷமாக பேசியுள்ளார் என்பது கவனிக்கதக்கது. அப்படி கருணாஸ் மனதில் என்ன இருக்கிறது ,சசிகலா வகுத்த திட்டம் என்ன , கருணாஸ்ஸிடம் கூறியது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறது அதிமுக.அதை வெளியே கொண்டு வர விசாரிப்பதற்கே போலீஸ் காவல் விசாரணை என்ற திட்டம்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டதில் பேசிய நடிகர் கருணாஸ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை அதிகாரிகள்,நாடார் , வன்னியர் என கடுமையாகப் பேசினார்.இதற்கு நடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிந்து கைது செய்தது காவல்துறை.இதில் நடிகர் கருணாஸ் கைதுக்குப் பிறகு முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது தமிழக காவல்துறை அரசின் உத்தரவுக்கிணங்க முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகளின் செய்யும் கந்துவட்டி, கலப்பட கருப்பட்டி என அனைத்து சட்டவிரோத தொழில்கள் நடவடிக்கை குறித்து கூர்ந்து கவனித்து வருகின்றனர் காவால்துறையினர்.நடிகர் கருணாஸ்க்கு ஆதரவாக பேசும் சட்டமன்ற உறுப்பினர்கள் யார்யார் என்றும் கவனிக்கிறார் எடப்பாடி.காரணம் சசிகலா திட்டம் எதாவது வெளி வருமா என்ற கோணத்தில் முதல்வர் எடப்பாடி அணுகுகிறார்.நடிகர் கருணாஸ் பேச்சு குறித்து நடிகர் கருணாஸ் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர், நடிகர் கருணாஸ் மீதான நடவடிக்கை சரியானதுதான். முட்டாள்தனமாகப் பேசி, மற்ற சமூகங்களின் எதிர்ப்பை சம்பாதித்துவிட்டார் என்றும் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த பிறகுதான் நடிகர் கருணாஸ் பேச்சில் இந்த மாற்றம் என்றும் யூகிக்கிறார்.நடிகர் கருணாஸ் பேச்சில் நாடார் , வன்னியர் என இரண்டு சமூகங்களை விமர்சித்துப் பேசினார். காரணம், முதல்வர் பதவிக்கு சசிகலா வராமல் போனதற்குக் காரணம் ஆடிட்டர் குருமூர்த்தியும் சசிகலா புஷ்பாவும் தான். அதனால்தான், இந்த இரண்டு பேரின் சமூகங்களையும் விமர்சித்தார் என்று நம்மால் சொல்ல முடியும். நடிகர் கருணாஸ் பேசியதில் எந்த இடத்திலும் மத்திய அரசை அவர் விமர்சிக்கவில்லை. இப்போது அதிமுகவை கைப்பற்றி முழு அதிகாரமும் எடப்பாடி பழனிசாமியின் சமூகம் பக்கம் போய்விட்ட ஆத்திரமும் அவரின் பேச்சில் வந்த வார்த்தைகளாக வெளிப்பட்டது. காரணம் தொடக்கத்தில் அமைதியாக தான் நடிகர் கருணாஸ் பேசினார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைப் பகைத்துக் கொண்ட நடிகர் கருணாஸ் திமுக ஸ்டாலின் நடத்திய மாதிரி சட்டமன்றத்தில் கலந்து கொண்டார்.தற்போது தமிழக அரசியல் என்பது தி.மு.கவுக்கும் அண்ணா தி.மு.கவுக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் , விமர்சன சண்டை நடந்து கொண்டு இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமியின் இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணமே நடிகர் கருணாஸ் வாயில் இருந்து வார்த்தையாக வந்தது.எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த வேண்டும் என்றால் திமுக ஸ்டாலின் மிகவும் அவசியம். தினகரனும் ஸ்டாலினும் இணையாவிட்டால் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. இதன் தொடர்ச்சியாகத்தான், கருணாஸுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின். இந்த அரசியல் ஆட்டங்களைப் புரிந்துகொண்ட பிறகுதான், கருணாஸைப் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது தமிழக காவல்துறை.
ஆனால் கருணாஸ்ஸை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளிக்க முடியாது’ என நீதிமன்றம் கூறி வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எட்டப்பாடிக்கு எதிராக ஸ்டாலின் ,சசிகலா ,தினகரன் , கருணாஸ் தொடங்கிய இந்த கூட்டணியின் முதல் வெற்றி என பார்க்கப்படுகிறது.
DINASUVADU