நாலுகால் பிராணி என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அமமுக துணை பொது செயலாளர் TTV தினகரன் விமரசனம் செய்துள்ளார். தமிழக அரசையும் , தமிழக முதல்வரையும் விமர்சித்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அமமுக துணை பொது செயலாளர் TTV.தினகரன் இன்று செய்தியாளர்களை பொது தமிழக முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் , கடந்த ஆண்டு கரூர் மாவட்ட கூட்டத்தில் பங்கேற்று பேசிய போது , இந்த ஆட்சியை துரோக ஆட்சி , எடுபுடி ஆட்சி என்று கூறியதற்கு என்மீது அரசு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கி வைத்துவிட்டு மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் கள்ளிக்குடியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது தமிழக முதல்வர் கூறுகையில் , திமுக கட்சியினர் மக்களை பற்றி சிந்திக்க மாட்டார்கள். தங்களை மட்டும் சிந்திக்கும் கட்சி தான் திமுக. ஆனால் அதிமுக மக்களை பற்றி சிந்திக்கும் கட்சி , நான் உட்பட இங்கே இருக்கும் அனைவரும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்.எனவே எங்களுக்கு […]
சேலம் மாவட்டம் மேட்டூர் மேச்சேரியில் தக்காளி அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகின்றது.ஆண்டுக்கு சுமார் 16,000 டன் தக்காளியை விவசாயிகள் அறுவடை செய்கின்றனர். இங்கு விலையும் தக்காளி சென்னை, மதுரை, கோவை, கேரளா , பெங்களூரு உள்ளிட்ட பல பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.இந்நிலையில் மேச்சேரி விவசாயிகளின் கோரிக்கையான தக்காளி குளிர் பதன பாதுகாப்பு கிடங்கு அமைப்பது.இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேச்சேரி பகுதியில் தக்காளி குளிர் பதன கிடங்கு விரைவில் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய், வரும் 7-ம் தேதி முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்பட இருக்கிறது. பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்க உள்ளார். கடந்த ஆண்டு பொங்கல் பொருட்கள் தொகுப்பு, பச்சை நிற குடும்ப அட்டைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டது. […]
சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் 75 லட்ச ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். சென்னையில் வரும் 13ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இதனையொட்டி, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை இந்தோ சினி அப்பிரிசியேஷன் பவுண்டேஷன் பொதுச்செயலாளர் தங்கராஜ் சந்தித்து பேசினார். இதனையடுத்து அவரிடம் முதலமைச்சர் பழனிசாமி 75 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். கடந்த ஆண்டுகளில் சென்னை சர்வதேச […]
அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்பதே இல்லை என்றும் தொண்டர்களே வாரிசு என்றும் முதல் அமைச்சர் பழனிசாமி பேசினார். அதன்பின் அவர் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் என்னதான் விரட்டினாலும் ஒன்றும் நடக்க போவது இல்லை. தி.மு.க. ஆள் வைத்து உழைக்கிற கட்சி. அ.தி.மு.க. சொந்தமுடன் உழைக்கின்ற கட்சி. தி.மு.க. தலைவராக கருணாநிதி இருந்தபொழுதே அ.தி.மு.க. ஆட்சியை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மக்களை ஏமாற்றும் கட்சிகள் இனி ஆட்சிக்கு வர முடியாது என்று அவர் பேசினார். DINASUVADU
வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கு தற்போது உள்ள 2 சதவீத உள் இட ஒதுக்கீடு, மேலும் 1 சதவீதம் உயர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். வேலைவாய்ப்புகளில், விளையாட்டு வீரர்களுக்கு தற்போது உள்ள 2 சதவீத உள் இட ஒதுக்கீடு, மேலும் 1 சதவீதம் உயர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி, அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்னை – நேரு உள் விளையாட்டு அரங்கில் […]
‘தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் நேர்மையானவர்’ என்று அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார். சென்னை, அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் பொன்னையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அதிமுக ஆட்சியில் நடைபெறும் ஆன்லைன் டென்டரில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக ஆர்.டி.ஜி.எஸ்.முறையில் பணம் செலுத்தும் ஆன்லைன் டென்டர் ஒப்பந்த முறையை முதலமைச்சர் அறிமுகப்படுத்தியதாக அவர் கூறினார். ஒட்டன்சத்திரம் – அவிநாசி சாலைக்கான டென்டர் முறை ஆன்லைன் வழியாகவே நடைபெற்றதாகவும் […]
தமிழக முதல் அமைச்சருக்கு எதிரான ஊழல் வழக்கு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக முதல்-அமைச்சருக்கு எதிரான ஊழல் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து தி.மு.க. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் மூலம் ரூ.4,833 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும், இதை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த சென்னை […]
தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் 127 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 471 புதிய பேருந்துகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலாக வளாகத்தில் தொடக்கி வைத்தார்.இந்த பேருந்துகள் அனைத்தும் இன்றுமுதல் சேவை தொடங்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. DINASUVADU
மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து இன்று ஒரு செய்தி குறிப்பு வந்தது அதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கி இறந்த 14 பேரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரணநிதியில் இருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3 இலட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்து இருந்தது.அதன் விவரம் பின்வருமாறு : திருப்பூர் மாவட்டம், […]
நடிகர் கருணாஸைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனுவை தாக்கல் செய்துள்ளனர். நடிகர் கருணாஸ் சசிகலாவைச் சந்தித்த பிறகே இப்படி ஆக்ரோஷமாக பேசியுள்ளார் என்பது கவனிக்கதக்கது. அப்படி கருணாஸ் மனதில் என்ன இருக்கிறது ,சசிகலா வகுத்த திட்டம் என்ன , கருணாஸ்ஸிடம் கூறியது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறது அதிமுக.அதை வெளியே கொண்டு வர விசாரிப்பதற்கே போலீஸ் காவல் விசாரணை என்ற திட்டம். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் […]
பாரதிய ஜனதா உள்ளிட்ட எந்த கட்சியுடனும், அதிமுக கூட்டணி வைத்திருக்கவில்லை என முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்திருக்கிறார். ஈழத்தமிழர் படுகொலை செய்யப்பட்டதில் திமுக – காங்கிரஸ் தலைவர்களுக்கு உள்ள தொடர்பு பற்றிப் போர்க்குற்ற விசாரணை நடத்தித் தண்டிக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, மத்திய அரசோடு இணக்கமாக செயல்பட்டாலும் எதிர்க்க வேண்டியதை கண்டிப்பாக எதிர்ப்போம் என திட்டவட்டமாக தெரிவித்தார். ஆட்சி […]
சென்னை, செப்.24- கட்சியிலும், ஆட்சியிலும் கொல்லைப்புறமாக உள்ளே வந்து, ஊழல் பண மூட்டைகளின் மேல் அமர்ந்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வைப் பற்றி விமர்சிக்க துளிகூட தகுதி இல்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றில் குறிப்பிட் டுள்ளார். இதுகுறித்து மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு- ஊழல் மூட்டைகள் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கிடங்காகக் கிடக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏதோ நான் தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து […]
முக்குலத்தோர் புலிப்படை ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகர் கருணாஸ் தமிழ்நாடு முதல்வரை அடிப்பேன் , காவல்துறை அதிகாரிகள் மோதி பார்க்கட்டும் என்று சரமாரியாக பேசினார் சென்னை , கடந்த ஞாயிறு முக்குலத்தோர் புலிப்படை ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகர் கருணாஸ் தமிழ்நாடு முதல்வரையும் , காவல்துறை அதிகாரிகளையும் சரமாரியாக பேசினார்.அது மட்டுமில்லாமல் அவர் பேசும் எடப்பாடி அரசு அமைய காரணம் நான் தான்.கருணாஸ் இல்லாமல் இந்த அரசாங்கம் அமைந்து இருக்காது.கூவத்தூர் விடுதி இருப்பதை சொன்னவன் நான்.அங்கே தான் ஒருவரும் தப்பிக்க முடியாது […]
சேலம் மற்றும் சென்னை நெடுஞ்சாலைத்துறை வட்டார அலுவலகங்களில் முதல்வர் ரூ.310 கோடி மதிப்புள்ள டெண்டர்களை தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி நேரடியாகவே பெற்றுக்கொண்டிருப்பதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஆன்லைன் டெண்டருக்குப் பதில், தன் சொந்த மாவட்டமான சேலம் உள்ளிட்ட பல்வேறு நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டார அலுவலகங்களில், டெண்டர்களை நேரடியாகவே பெற்றுக்கொள்ளும் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நெடுஞ்சாலைத்துறையில் இணையவழி […]
குட்கா ஊழல் புகாரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், டிஜிபியும் ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொள்கிறார்கள் என, ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக டி.டி.வி. தினகரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “குட்கா ஊழல் புகார் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திவந்த விசாரணையின் மீது நம்பிக்கை இல்லாமல், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் வீடுகள் உட்பட […]