செங்கோட்டையன் "திமுகவின் பி டீம்.." - எடப்பாடி பழனிசாமி தாக்கு!

கருணாநிதியின் படத்தை வைத்து சைக்கிள் வழங்கியபோதே செங்கோட்டையன் திமுகவின் பி டீம் என்று கண்டுபிடித்தேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Hero Image

ஈரோடு : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்தார்.

எடப்பாடி பழனிசாமி பேசியதாவது“கருணாநிதியின் படத்தை வைத்து சைக்கிள் வழங்கியபோதே திமுகவின் பி-டீம் என்று கண்டுபிடித்தேன். சட்டமன்றத்தில் திமுகவை எதிர்த்து பேசாதவர். அதிமுக விசுவாசி அல்ல. செங்கோட்டையன் திமுகவின் உளவாளி.மோசமான குணம் கொண்டவர் செங்கோட்டையன். அமைச்சர் பதவி வேண்டுமென்று கண்ணீர் விட்டு அழுதார். நானும் கொடுத்தேன். செங்கோட்டையனை அமைச்சரவையில் சேர்த்தது நான் செய்த தவறு.அதிமுகவை உடைக்க திமுகவுடன் இணைந்து செயல்பட்டவர் செங்கோட்டையன்.

30 ஏக்கரில் கல்லூரி கட்டியது எப்படி? வயதுக்கு ஏற்றபடி பேச வேண்டும். பணம் இருந்தும் கட்சியினருக்கு உதவி செய்யாதவர். பணம் இருப்பவர்களிடம் மட்டும் நட்பு பாராட்டும் செங்கோட்டையன்.ஒருகாலத்தில் நெருங்கிய நண்பராக இருந்தவர் செங்கோட்டையன். ஆனால் அது நீடிக்கவில்லை. அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக கண்ணீர் விட்டவர். ‘நீ தரவில்லை என்றால் எனக்கு யார் தருவார்கள்?’ என கண்ணீர் வடித்தார்.

இதுவரைக்கும் பேசாதிருந்தேன். அவரு தானா MLA ஆகல. ஆனா இங்க இருக்கின்ற கழக நிர்வாகிகள் இரவென்றும் பகலென்றும் பாராமல் தலைவர் காலத்திலும் சரி, அம்மா காலத்திலும் சரி ரத்தத்தை வேர்வை மண்ணிலே சிந்தி உழைத்ததால் அவர் MLA ஆனார்.

நீங்க எல்லாம் பாடுபட்டு தானே அவர் MLA ஆனார்?ஆனா சுயநலம், திமிர், அகந்தை... அதனால அவரை வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கட்சிக்குக் கட்டுப்பாடு தேவையா இல்லையா? கட்சி கட்டுப்பாட்டை மீறினால் யாராக இருந்தாலும் அம்மா இருக்கிற காலத்திலும் சரி, தலைவர் இருக்கிற காலத்திலும் சரி அதைத் தொடர்ந்து அதிமுக கடைபிடித்தது.இந்தக் கோபிசெட்டிப்பட்டி நகரத்துல ஒருத்தர் கூட எனக்கு அடையாளம் தெரியாது. அப்படி வச்சிருந்தார்.

இங்க நகர செயலாளர் பெரியதேசி இருப்பார். நான் அப்பதான் பார்த்தேன். என்னை வந்து பார்க்கப் போதா இவரு தான் நகர செயலாளர். அப்படி ஒரு மோசமான குணம் படைத்தவர்.ஒரு நல்ல சட்டை போட்டுகிட்டு போனா கூட பொறுக்காது. கஷ்டப்பட்டு நீங்க உழைச்சு சம்பாதிச்சு அதுல வாங்குன சட்டையை போட்டுகிட்டு போனா கூட பொறுக்காத ஆளு. நாட்டுக்குத் தேவையா இந்த மனிதர்?இன்றைக்கு அவர் இருக்கின்ற வரை யாராவது நிம்மதியா வாழ முடிஞ்சுதா? இந்தப் பகுதியில் இருக்கிற சிந்து ரவிச்சந்திரனை ஓட்டிக்கட்டி அனுப்பிச்சிட்டார்.

அப்புறம் டிஸ்ட்ரிக்ட் சேர்மன் திரு. கந்தசாமி... பாவம் டிஸ்ட்ரிக்ட் சேர்மன் கட்சி விட்டுப் போறாங்கன்னா இவரு எப்படிப்பட்டவரா இருப்பார்?அவ்வளவு கீழ்த்தரமா பேசக்கூடிய மனிதர் இந்த செங்கோட்டையன். ஒருகாலத்தில் நல்ல நண்பராக இருந்தவர். ஆனால் அந்த நட்பு நீடிக்கவில்லை. அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக கண்ணீர் விட்டவர். நான் கொடுத்தேன். அவரை அமைச்சரவையில் சேர்த்தது நான் செய்த தவறு.அதிமுகவை உடைக்க திமுகவுடன் இணைந்து செயல்பட்டவர் செங்கோட்டையன்.” எனவும் எடப்பாடி தெரிவித்துள்ளார்.