ராகுல்காந்திக்கு வயநாட்டில் ஓட்டு இருந்ததா? கார்த்தி சிதம்பரத்திற்கு சீமான் பதிலடி!

காரைக்குடியில் சீமானுக்கு வீடும் கிடையாது. ஓட்டும் கிடையாது என கார்த்தி சிதம்பரம் விமர்சித்த நிலையில் சீமான் பதிலடி கொடுத்து பேசியிருக்கிறார்.

Hero Image

சென்னை: மந்தைவெளியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் தலைவர் கார்த்தி சிதம்பரம் தன்மீது வைத்த விமர்சனத்துக்கு சீமான் கடுமையான பதிலடி கொடுத்தார்.

கார்த்தி சிதம்பரம், “சீமான் காரைக்குடியில் வீடோ, ஓட்டோ இல்லை. அப்புறம் வந்து நிற்கிறார். தேர்தலுக்காக மட்டும் வருவார்கள்” என்று விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த சீமான்,“அது ஒரு சிறுபிள்ளைத்தனமான விமர்சனம். நீங்க கேட்கிறீங்கன்னா சொல்றேன். ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிட்டார். அங்கே அவருக்கு ஓட்டும் வீடும் இருந்ததா? அவருக்கு அப்புறம் அவரது தங்கை போட்டியிட்டார். பெரிய தம்பி ஓட்டூம் வீடு இருந்துச்சு. இப்ப மேலூரில் காங்கிரஸ் சார்பில் ஒருவர் நின்றிருக்கார். அவருக்கு ஓட்டும் வீடும் இருக்கு. அவருக்கு காஞ்சிபுரம்.

ஓட்டும் வீடும் இருக்கு சார். ஒரு தொகுதியில் போட்டியிடணும்னா ஓட்டும் வீடும் இருக்கணும்னு சொல்றீங்களா? நீங்க தான் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி’ன்னு சொல்லி, தேசிய ஒருமைப்பாட்டைப் பேசுறீங்க. இப்ப எப்படி? பயம்... பயம்... அந்த நடுக்கம் உங்களுக்கு இருக்கணும்” என்று கூறினார்.

மேலும், சீமான் கூறுகையில்,“காரைக்குடியில் எனக்கு வீடு இல்லை, ஓட்டு இல்லை. ஆனால் இந்த நாடே என் வீடு. நான் ஒட்டுமொத்த தமிழ் தேசிய மக்களின் செல்ல மகன். நானும் கார்த்தி சிதம்பரமும் இரட்டை சகோதரர்கள் இல்லை. வெளிநாடு போறது, உலகத்துல எல்லாருக்கும் உங்க அப்பா மத்திய அமைச்சர். நீங்க பாராளுமன்ற உறுப்பினர். எந்த நாட்டுக்குப் போய்ப் பார்த்தாலும் யார் செல்வம் மகன், யார் செல்ல மகன் என்பது தெரியும். ஓட்டு போடுறாங்க, போடல. நான் வெல்றேன், வீழலாம். ஆனால் தனிச்சு தன்மானத்தோடு, என் மக்கள் மீது நம்பிக்கை வச்சு நிக்கிறேன்.

அந்தத் துணிவு இந்த நிலத்துல எந்தக் கட்சிக்கு இருக்கு? ஆண்டுகிட்டு இருக்கிற கட்சி 22 கட்சிகளை சேர்த்துக்கிட்டு இருக்கு. அதுல ஒரு கட்சி காங்கிரஸ். நீதான் ரோசக்காரர். அவங்க உனக்கு சீட் தரல. வெளியில போயிட்டு என்னை மாதிரி தனியா நிக்கச் சொல்லு” என்று கடுமையாக சாடினார்.சீமான் தனது பேச்சில், “நான் புலி. முதல் முதலா களத்தில் ஒரு புலியைப் பார்க்கிறீங்க. நான் எடுக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லணும். புரியுதா?” என்றும் கூறினார்.இந்த பதிலடி, மந்தைவெளியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரும் கவனத்தை ஈர்த்தது.