#Breaking:சென்னை,காஞ்சிபுரத்தில் நாளையும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை..!

Schools and colleges in Chennai and Kanchipuram districts will be closed tomorrow due to rain

சென்னை,காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு  நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றதனால்,சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதற்கிடையில், சென்னை,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று அதிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,ஏற்கனவே பெய்த மழையால்,வெள்ள நீர் தேங்கியுள்ளதன் காரணமாகவும்,மழை தொடர்வதாலும் சென்னை ,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளையும் (நவ.12) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

மழை காரணமாக ஏற்கனவே நான்கு நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில்,மேலும்,மழை தொடர்வதால் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.