கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் சு.வெங்கடேசன்.!
கொரோனா தொற்றிலிருந்து இன்று சு.வெங்கடேசன் குணமடைந்து வீடு திரும்பினார்.
மதுரை தொகுதியின் எம்பி சு.வெங்கடேசன் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி காய்ச்சல் தென்பட்டதை தொடர்ந்து 22-ம் தேதி கொரோனாவுக்கான பரிசோதனை மேற்கொண்ட பின்னர் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனையடுத்து, 23-ம் தேதி தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது 10 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாத தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் கோவிட் நோயாளியாக இப்பதிவினை எழுதுவது அவசியம் என்று நினைக்கிறேன்.
3/3#maduraiMPwrites#COVID19முழு பதிவினை படிக்க..https://t.co/9Ju94nvZFa
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 1, 2020