இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வதற்கான சேவையில் தமிழ், ஆங்கில போன்ற மாநில மொழிகள் நீக்கப்பட்டு, இந்தியில் மட்டுமே கிடைத்தது. இதனை கண்டித்து சு.வெங்கடேசன் எம்.பி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனம், இந்த பிரச்சினைக்கு வெற்றிகரமாக தீர்வு காணப்பட்டுவிட்டது என்று பதில் தெரிவித்துள்ளது. அந்த பதிலில், நவம்பர் 1 முதல் ஏர்டெல்லிருந்து ஜியோவிற்கு மாறியதால் எங்கள் இன்டர்ஆக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் சிஸ்டத்தில் […]
இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ் நிறுத்தப்பட்டது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘இன்டேன் தானியங்கி சமையல் எரி வாயு பதிவு சேவையில் இவ்வளவு காலம் தமிழ், ஆங்கிலத்திற்கான வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன. தற்போது அந்த வாய்ப்புகள் நீக்கப்பட்டு இந்தி சேவை மட்டுமே கிடைக்கிறது. அலைபேசி வழியாக பதிவு செய்யப் போகிற மக்கள் என்னவென்றே புரியாமல் திகைத்து நிற்கிறார்கள். சமையல் எரிவாயு வேண்டுமென்றால் இந்தி […]
தமிழ்நாடு அரசு பரிந்துரையின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில், விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான தீர்மானம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆளுநரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று தெரிவித்தார். […]
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வாரா கடன் பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் அறிந்து அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். வாரா கடன் என்பது மத்திய அரசு சார்பில் , பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையாகும். அது முறையான கால இடைவெளியில் வசூல் செய்யப்பட வேண்டும். இது குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் […]
சு.வெங்கடேசன் எம்.பி, தனது எக்ஸ் தள பக்கத்தில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிக்கான கால வரையறை திட்டத்தை (Bar chart) தாருங்கள் எனக் கேட்டதற்கு “அதே வாழைப்பழந்தான் இது” என்பது போன்று பதில் சொல்லியுள்ளார் ஒன்றிய அமைச்சர். விதி 377ல் கேட்கப்பட்ட கேள்விக்கு கூட நேர்மையாக பதில் தர முடியாத அளவு தோல்வி அடைந்துள்ளது ஒன்றிய அரசு என பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 8, 2023 அன்று அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை என்ற […]
பாஜக ஆட்சியில் தான் அதிக அளவிலான எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக ஒரு செய்தி தாள் குறிப்பை பதிவிட்டு மதுரை, கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாஜக ஆட்சி காலத்தில் எம்பிக்களின் இடைநீக்கம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என அதில் குறிப்பிட்டுளளார். அவர் பதிவிட்டுள்ள செய்தித்தாள் குறிப்பில், சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பாஜக எம்பி ரமேஷ் பிதுரி , பகுஜன் சமாஜ்வாடி எம்பி டேனிஷ் அலியை […]
இந்த கோரிக்கையை ஏற்று உத்தரவிட்ட மத்திய ரயில்வே அமைச்சருக்கு, சு.வெங்கடேசன் எம்பி நன்றி. கருணை அடிப்படையில் ரயில்வே வேலையில் சேர்ந்தவர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற 2023 மே வரை அவகாசம் அளித்தது ரயில்வே அமைச்சகம். கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதிருந்தார். இந்த நிலையில், அவகாசத்தை நீடித்து மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. எனது கோரிக்கையை ஏற்று உத்தரவிட மத்திய ரயில்வே அமைச்சருக்கு, சு.வெங்கடேசன் நன்றி […]
கொரோனா தொற்றிலிருந்து இன்று சு.வெங்கடேசன் குணமடைந்து வீடு திரும்பினார். மதுரை தொகுதியின் எம்பி சு.வெங்கடேசன் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி காய்ச்சல் தென்பட்டதை தொடர்ந்து 22-ம் தேதி கொரோனாவுக்கான பரிசோதனை மேற்கொண்ட பின்னர் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து, 23-ம் தேதி தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது 10 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாத தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனாலும் […]
இந்தியத் தொல்லியல் துறையின் இந்த அறிவிப்பை வரவேற்கிறேன் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் : உத்தரப் பிரதேச மாநிலத்தில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் இயங்கி வருகிறது.இந்த நிறுவனம் மத்திய அரசின் கீழ் இயங்கி வருகின்றது. சமீபத்தில் வெளியான அறிவிப்பு : சமீபத்தில் இந்த நிறுவனம் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தது.அந்த விளம்பரத்தில், முதுகலைப் பட்டம் பெற்று இருப்பவர்கள் தொல்லியல் துறை […]