மாணவர் ஆதித்யா உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு.!

தருமபுரி மாணவர் ஆதித்யா உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு.

தருமபுரி மாணவர் ஆதித்யா உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழகத்தில் இருந்து 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் எழுதுள்ளனர்.

இந்நிலையில், நாளை நீட் எழுதவிருந்த தருமபுரி செந்தில்நகர் பகுதியை சேர்ந்த மாணவர் ஆதித்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இரண்டாம் முறை விண்ணப்பித்திருந்த நிலையில் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆதித்யா தாய் சேலத்துக்கு சென்று இருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த மாணவன் விபரீத முடிவு எடுத்துள்ளார்.நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்து மருத்துவமனை வளாகம் முன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உடற்கூராய்வுக்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.