தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். சமீபத்தில், நாகப்பட்டினம் அல்லது தூத்துக்குடி தொகுதியில் விஜய் போட்டியடுவார் என தகவல் வெளியானது. பின்னர், விக்கிரவாண்டி அல்லது நாகை மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் எனத் தகவல் வெளியானது. இப்படி அவ்வப்போது, விஜய் போட்டியிட போகும் தொகுதி தொடர்பான தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் […]
கிருஷ்ணகிரி :தமிழ்நாட்டில் இன்று (09-11-2024) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியில் மதியம் 1.30 மணியளவில் பூமியின் 5 கி.மீ ஆழத்திற்கு மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3ஆக பதிவாகியுள்ளது. இதனையடுத்து, இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பாக, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சென்னை வானிலை ஆய்வகம் நிலநடுக்கத்தை உறுதி செய்தது. இந்நிலையில், பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு, வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்ததாகவும், ஆனால் உயிர் சேதம் […]
தருமபுரி : பொதுமக்களின் கோரிக்கைகள், தேவைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு அரசின் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஊரகப் பகுதிகளில் இன்று தருமபுரி பாளையம் புதூரில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். “மக்களுடன் முதல்வர்“ திட்டம் என்பது தமிழக முதல்வர் மக்கள் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்க்கும் ஒரு திட்டமாகும். முதல்கட்டமாக நகர்ப்புறங்களில் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது. தற்பொழுது, ஊரகப் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ள இந்த […]
தருமபுரி: தருமபுரி அருகே மருத்துவமனையில் உதவியாளர் பணிக்கு போலியாக பணி நியமன ஆணை கொடுத்த மருத்துவமனை உதவியாளர் கைது. இவர் வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த மடதள்ளி கிராமத்தைச் சார்ந்த அதியமான் என்பவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்களின் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் போது, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின், உறவினர்களோடு நன்றாக […]
தருமபுரி: பாஜக தலையிலான NDA கூட்டணி சார்பாக தர்மபுரி பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிட்டார். தேர்தல் முடிவில் திமுக வேட்பாளர் மணியிடம் தோல்வி கண்டார். சௌமியா 4.11 லட்சம் வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் மணி 4.32 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இறுதி வரையில், வெற்றிக்கு அருகில் வந்து சிறு வாக்கு வித்தியாசத்தில் சௌமியா அன்புமணி தோல்வியை சந்தித்தார். சௌமியா அன்புமணி தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த […]
மக்களவை தேர்தல் : தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் தருமபுரி தொகுதியில், பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 100174 வாக்குகள் பெற்று 15369 முன்னிலையில் வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். அதற்கு அடுத்தபடியாக, திமுக வேட்பாளர் மணி 84805 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் அசோகன் 69710 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
C.M. Stalin: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி உங்களுக்கு உத்தரவாதம் கொடுத்தாரா என பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி. தர்மபுரி மக்களவை தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதன்படி தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள தடங்கம் ஊராட்சி பகுதியில் தர்மபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் மணி, கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். பொதுக்கூட்டத்தில் […]
தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட ஐந்து வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி நெல் மூட்டை ஏற்றி சென்ற லாரி தொப்பூர் கணவாய் பகுதியில் ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன் பக்கம் சென்று கொண்டிருந்த இரண்டு லாரி மற்றும் மூன்று கார்கள் மோது வேகமாக மோதியது. இந்த விபத்தில் சிக்கிய ஒரு லாரி பாலத்திற்கு கீழே விழுந்து நொறுக்கியது. இச்சம்பவத்தில் மூன்று பேர் உடல் கருகி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். […]
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி காவல்நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதியை சீர்குலைக்கும் வண்ணம் நடந்துகொண்டதாக இளைஞர் ஒருவர் புகார் அளித்து உள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் “என் மண் என் மக்கள்” எனும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தர்மபுரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலை, கடந்த 8ஆம் தேதி பொம்மிடி அருகே பள்ளிப்படி எனும் ஊரில் உள்ள லூர்து அன்னை தேவாலயத்தின் உள்ளே […]
தருமபுரி:முத்தம்பட்டி அருகே நடுவழியில் கன்னூர் – யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு. வடகிழக்கு பருவ மழையினால் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால்,பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் தேங்கியுள்ளது. இந்த நிலையில்,கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து கர்நாடகா மாநிலம் யஷ்வந்த்பூருக்கு இன்று அதிகாலையில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது.இந்த ரயில் தருமபுரி முத்தம்பட்டி அருகே வந்தபோது நடுவழியில் அங்கு மண்சரிவினால் தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் மீது மோதியது.இதனால்,கண்ணூர் […]
தர்மபுரியில் மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள மருத்துவ குழுவினர். தருமபுரி மாவட்டம் அரூரில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் மதிவாணன். மாற்றுத்திறனாளியான இவர் பாட்சாபேட்டையில் வசிக்கிறார். இவருக்கு தடுப்பூசி போடும் முகாமிற்கு செல்வதில் சிரமங்கள் இருப்பதாக அந்த ஊர் மருத்துவ அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தனது இயலாமையை தெரிவித்த மதிவாணனின் அழைப்பை ஏற்று, அரூர் பகுதியின் மருத்துவ அலுவலர் தொல்காப்பியன் தலைமையிலான மருத்துவ குழு ஒன்று அவரது வீட்டிற்கே சென்று […]
தருமபுரி மாவட்டம் ஏலக்குண்டூர் அருகேயுள்ள பஞ்சப்பள்ளி காப்புக்காடு பகுதியில் அமைந்திருந்த விவசாய கிணற்றில் காட்டு யானை ஒன்று தவறி விழுந்துள்ளது . 7 வயது மதிக்கத்தக்க அந்த காட்டு யானை இரையை தேடி சென்ற போது தண்ணீர் இல்லாத 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளது . அதனையடுத்து, யானையின் சத்தத்தை கேட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் தவறி விழுந்த யானையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் […]
தர்மபுரியில் 50 அடி ஆழ தண்ணீர் இல்லாத கிணற்றில் யானை ஒன்று தவறி விழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம் ஏலக்குண்டூர் அருகேயுள்ள பஞ்சப்பள்ளி காப்புக்காடு பகுதியில் அமைந்திருந்த விவசாய கிணற்றில் காட்டு யானை ஒன்று தவறி விழுந்துள்ளது . 7 வயது மதிக்கத்தக்க அந்த காட்டு யானை இரையை தேடி சென்ற போது தண்ணீர் இல்லாத 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளது . அதனையடுத்து யானையின் சத்தத்தை கேட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தற்போது […]
தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் சேர்வராயன் மலை அடிவாரத்தில் வாணியாறு அணை உள்ளது. தற்போது, இந்த அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து நிரம்பும் நிலையில் உள்ளத்து. இந்நிலையில், கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் மலர்விழி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தருமபுரி மாணவர் ஆதித்யா உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழகத்தில் இருந்து 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் எழுதுள்ளனர். இந்நிலையில், நாளை நீட் எழுதவிருந்த தருமபுரி செந்தில்நகர் பகுதியை சேர்ந்த மாணவர் ஆதித்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இரண்டாம் முறை விண்ணப்பித்திருந்த நிலையில் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் […]
தர்மபுரி மாவட்டம் பிக்கனஅள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி, இவருக்கும் ஒட்டர் திண்ணை கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மேலும் இந்த திருமணத்தை விரும்பாத ராஜேஸ்வரியின் தந்தை முனிராஜ் கடந்த 1ம் தேதி விஜயை வரவழைத்து கொலை செய்தார். மேலும் விஜயின் உடலை அரை நிர்வாண நிலையில் பாலக்காடு பகுதி சாலையோரம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் ராஜேஸ்வரி கணவனை இழந்த சோகத்தில் […]
தர்மபுரி மாவட்டதில் காதலித்த பெண்ணை திருமணம் செய்த இளைஞரை கம்பியால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் பெண்ணின் தந்தை உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர். பஞ்சபள்ளி ஒட்டர்திண்ணை பகுதியில் வசித்து வந்தவர் விஜி இவரை ராஜேஸ்வரி என்ற பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது, ராஜேஸ்வரியின் தந்தை முனிராஜ் என்பவர் பெங்களூரில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார், மேலும் இந்த […]
சென்னையில் உறவினர் வீட்டிற்கு வந்துசென்ற நிலையில் தருமபுரியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், நேற்று மேலும் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தில், இதுவரை 8324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தநிலையில் அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு […]
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோட்டில் வருகின்ற 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். 11-ம் தேதி பாலக்கோட்டில் ஸ்ரீபுதூர் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதை ஒட்டி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகின்ற 28-ம் தேதி பணி நாளாக நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மலர்விழிஅறிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு 2 ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து ஊர் மக்கள் திரண்டு ஆசிரியர்களை தாக்கியுள்ளனர். தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் எனும் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர்களாக லட்சுமணன் மற்றும் சின்னமுத்து ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு இந்த இரண்டு ஆசிரியர்களும் தொடர்ந்து செல்போன் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. […]