பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்விற்காக போராடியவர் இராமசாமி படையாட்சியார் – ஓபிஎஸ்

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மலர்த்தூவி மரியாதை.

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மலர்த்தூவி மரியாதை.

சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளையொட்டி பல அரசியல் தலைவர்கள் அவரது உருவ படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ராமசாமி படையாட்சியாரின் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான இராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த தினமான இத்திருநாளில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்விற்காக போராடிய இராமசாமி படையாட்சியார் அவர்களின் அளப்பரிய சேவைகளையும், தியாகங்களையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன். ஏழை மக்களது வளர்ச்சிக்கு வித்திட்ட அவரது அடியொற்றி இளைய சமுதாயம் முன்னேற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node