#BREAKING: தொடர்ந்து ஆலோசனை நடத்தும் ரஜினிகாந்த் ..!

Rajinikanth is in consultation with party chief co-ordinator Arjuna Murthy and supervisor Tamilruvi Maniyan at his residence in Poes Garden

சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் உடன் ரஜனிகாந்த் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், வரும் 31-ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளார். ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சிக்கு மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனமூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.