மழையோ மழை... இன்று முதல் ஆரம்பம்.! எங்கெல்லாம்? சுயாதீன வானிலை ஆய்வாளர் அப்டேட்.!

சென்னை முதல் வேலூர் வரை உள்ள பகுதிகளில் பிற்பகலில் இருந்து இரவு வரை மழை பெய்ய வாய்ப்புஎன தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

Rain - Pradeep John

சென்னை :பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சுயாதீன (தனியார்) வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் இன்று முதல் 19ம் தேதி வரை எங்கெல்லாம் மழை பெய்யும் என்கிற விரிவான அப்டேட்டை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில், ” மழை மீண்டும் தொடங்கிவிட்டது, இதனால், இன்றும் நாளையும் வெப்பநிலை வெகுவாகக் குறையும். தெற்கு தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை (KTCC)

சென்னை (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகள்) முதல் வேலூர் வரை இன்று நண்பகல் முதல் இரவு வரை சில நேரங்களில் மழை பெய்யும். இதனால், வெளியே செல்வோர் குடையை எடுத்துச் செல்லுங்மாறு அறிவுறித்தியுள்ளார்.

கனமழை

இன்றைய தினம் (மார்ச் 11) தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனகாசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தேனி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

குற்றாலத்தில் நல்ல நீர்வரத்து (வெள்ளம்)  இருக்கும், அருவிகள் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மூடப்படும். கொங்கு மண்டலத்தின் பிற உள் பகுதிகளில் மிதமான மழையும், சில நேரங்களில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளார்.

unknown node