சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி அங்கங்கே பெய்து வரும் வேளையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. வரும் நவம்பர் 17 வரையில் […]
குமரி கடல், அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, தென் தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இன்றும் தென் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் […]
வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் ( Michaung) என பெயரிடப்பட்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 800 கிலோமீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் இருந்து 790 கிலோமீட்டர் கிழக்கு தெற்கு திசையில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதனால், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2ம் தேதி புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் டிசம்பர் 4 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ஏற்கனவே, வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த […]
வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு […]
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2-ஆம் தேதி புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், டிசம்பர் 2, 3 தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பருவமழை சென்னை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் […]
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான பெய்யும். – வானிலை ஆய்வு மையம். அந்தமான் கடற்பகுதிகள், தென் – கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், தென் மேற்கு வங்க கடல் பகுதியில் சூறை காற்று வீசகூடும் எனபதால் அந்த பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிதமான மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 3 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை,நாகை ,மயிலாடுதுறை,திருவாரூர்,ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிளுக்கு மட்டும் இன்று விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி,பூவிருந்தமல்லி,திருவள்ளூர்,பொன்னேரி ஆகிய […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம்,தமிழக கடலோரப்பகுதி,தென்மேற்கு வங்கக்கடல் மன்னார் வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்,கேரள கடலோரப் பகுதிகள்,லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வரையிலான வேகத்தில் […]
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து தென்-தென்கிழக்கே சுமார் 150 கி.மீ தொலைவிலிருந்து 18 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும். இது வடக்கு தமிழகம் & அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரைகளை புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே நவம்பர் 19 ஆம் தேதி அதிகாலையில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Depression over over southwest BoB off north TN coast, […]
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. ஆக.19ம் தேதி மேற்குவங்க பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தர்மபுரி, நீலகிரி , சேலம், கோவை,வேலூர்,திருவள்ளூர்,கிருஷ்ணகிரியில் மழை பெய்யும் என தகவல் […]