ராபிடோ ஆப்பை பயன்படுத்துபவரா நீங்கள்?! போலீஸ் கடும் எச்சரிக்கை!

நாம் ஓர் இடத்திலுருந்து இன்னோரு இடத்திற்கு செல்ல பெரும்பாலும், இருசக்கர வாகனங்களை பயன்படுதி வருகிறோம். இரண்டு மூன்று பேர் ஊருக்குள் ஒரு இடத்திற்கு செல்லவதற்கு ஆட்டோவை பயன்படுத்தி வந்தோம்.
ஆனால் தற்போது பெரு நகரங்கள் முதல், சிறு நகரங்கள் வரை இரன்டு மூன்று ஏன், ஒரு நபர் பயணம் செய்யக்கூட ஓலா, உபர் என ஆன்லைன் நான்கு சக்கர வாகனங்களை வாடகைக்கு புக்கிங் செய்ய ஆப்கள் வந்து குவிந்து இருக்கின்றன.
தற்போது இது இருசக்கர வாகனம் வரை தொடர்ந்து விட்டது. நான்கு சக்கர வாகனங்களை வணீக ரீதியாக பயன்படுத்த அனுமதி உண்டு. ஆனால் இரு சக்கர வாகனங்களை தனிப்பட்ட உபோயகத்திற்கு மட்டுமே பயன்படுத்த அனுமதி உண்டு.
ராபிடோ (RABIDO ) எனும் ஆப் மூலம் ஒரு நபர் மட்டும் சென்னையில் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால், இந்த ஆப்பில் புக் செய்தால் அருகில் இந்த ஆப்பில் பதிவு செய்த நபர் எவரேனும் தனது இருசக்கர வாகனம் மூலம் குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சென்று விட்டுவார்கள்.
இந்த பயணத்தின் போது ஏதேனும் விபத்து நேர்ந்தால், இன்சூரன்ஸ் பெறுவதில் நிறைய சிக்கல் உள்ளது. மேலும் இதனால் ஓலா, உபர் போன்ற ஆப் மூலம் வாடகை வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு தொழில் பிரச்சனை ஏறடுவதாலும் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
மேலும், வாடகை கார் ஓட்டுனர்களே தாங்கள் பயனர்கள் போல ராபிடோ ஆப் மூலம் புக் செய்துஅவர்களை போல்சில் சிக்க வைத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் 37 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த செயலியை யாரும் உபயோகப்படுத்த வேண்டாம் எனவும், இந்த ஆப்பை பயன்படுத்தி பயணம் செய்து ஏதேனும் விபத்து நேர்ந்தால் இந்த இன்சூரன்ஸ் பெற முடியாத அளவிற்கு பிரச்சனை வரும் எனவும், மேலும் இருசக்கர வாகனங்களை சொந்த உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும், வணீகரீதியாக அதனை உபயோகப்படுத்த கூடாது. என காவல்துறையினர் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?
February 25, 2025
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025