தகாத உறவு.! தட்டிக்கேட்ட சித்தப்பா கொடூர கொலை.! 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்.!

Default Image

குடும்பத்தில் நடந்த தகாத உறவை தட்டிக்கேட்ட சித்தப்பாவை, அப்பா மற்றும் உறவினருடன் அண்ணன் மகன் கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்பளித்துள்ள்ளது புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம். 

2020இல் கொடூரமாக நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் இன்று புதுக்கோட்டை மாவட்ட  முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் கொலை செய்யப்பட்டவரின் அண்ணன், அண்ணன் மகன், உறவினர் ஒருவர் என 3 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம்,  நாகுடி அருகே கூகனுரை சேர்ந்தவர் பாலையா. இவரது அண்ணன் சுப்பிரமணி அவரது மூத்த மகன் குமார், குமாரின் மனைவி உடன் சுப்பிரமணியனின் இன்னோர் மகன் விக்னேஸ்வரன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த குமார்,

தனது சித்தப்பா பாலையாவிடம் கூறி ,இதனை கண்டிக்க கூறியுள்ளார். அதன் படி , தனது அண்ணன் மகன் விக்கினேஸ்வரனை கண்டித்துள்ளார். இதில் வாக்குவாதம் முற்றி சண்டையாகி, சுப்பிரமணி, விக்னேஸ்வரன், வீரமணி ஆகியோர் சேர்ந்து அறிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தான் முதன்மை குற்றவாளியாக சுப்பிரமணி, விக்னேஸ்வரன், வீரமணி ஆகியோருக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்