சௌமியா விஸ்நாதன் (25 வயது) என்பவர் பிரபல ஆங்கில தொலைக்காட்சியான இந்தியா டுடேவில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று காலை 3:30 மணியளவில் சௌமியா தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சில மர்ம நபர்கள் சௌமியாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். […]
சுமைதூக்கும் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது திண்டுக்கல் நீதிமன்றம். முத்தழகுபட்டியை சேர்ந்த செபஸ்தியாரை முன் விரோதத்தால் கடந்த 2014-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி 10 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொன்றது. வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அந்தோணி விமல், சின்னப்பராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. அருள் ஆரோக்கிய தாஸ், தங்கம், ஜஸ்டின் தாஸ், ஜான் பிரபாகர், விக்னேஷ் இன்பராஜ், தாமரைக்கண்ணன் ஆகியோருக்கும் […]
குடும்பத்தில் நடந்த தகாத உறவை தட்டிக்கேட்ட சித்தப்பாவை, அப்பா மற்றும் உறவினருடன் அண்ணன் மகன் கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்பளித்துள்ள்ளது புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம். 2020இல் கொடூரமாக நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் இன்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் கொலை செய்யப்பட்டவரின் அண்ணன், அண்ணன் மகன், உறவினர் ஒருவர் என 3 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி அருகே […]
கச்சநத்தம் கொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு. கச்சநத்தத்தில் கடந்த 2018ல் நடந்த மோதலில் பட்டியலினத்தவர் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2018ல் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலையடுத்து ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் கச்சநத்தம் கொலை வழக்கில் 27 பேர் குற்றாவளிகள் […]
வேலூரில் காதலனை தாக்கி இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு. வேலூர் கோட்டை பூங்காவில் இளம்பெண்ணை வன்கொடுமை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, வேலூர் கஸ்பாவை சேர்ந்த மணிகண்டன், வசந்தபுரம் சக்திவேல் ஆகியிருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியான மாரிமுத்து என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த […]
குடிக்க பணம் தர மறுத்ததால் தாய் லீலாவதியை எரித்துக் கொன்ற வழக்கில் மகன் சந்தோஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கடந்த ஆண்டு மருதான்மலையில் தாயை எரித்துக்கொன்ற மகனுக்கு 40 வருட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனையை 40 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டும். குற்றவாளிக்கு எந்த சலுகையும் அரசு வழங்க கூடாது. தவறை உணர்ந்து திருந்த சந்தோஷ் மூன்று மாதம் தனிமை சிறையில் அடைக்கவும் புதுக்கோட்டை நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். […]
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கணவன் மனைவிக்கு ஆயுள் தண்டனையை சேலம் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. சேலம் மாவட்டம் மல்லியக்கரை பகுதியை சார்ந்த மணிகண்டன், ராமசந்திரன் ஆகிய இருவரும் அதே பகுதியை சார்ந்த 17 வயது சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கு ராமசந்திரன் மனைவி செல்வியும் உடன் இருந்திருக்கிறார். இதுகுறித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நடைபெற்றுவந்த இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் சேலம் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. […]
சென்னை உயர்நீதிமன்றம் தாயை கொன்ற மகனுக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றியது கடந்த 2018-ல் மறவன்பட்டி பேருந்து நிலையத்தில் தாயை கொன்ற மகனுக்கு, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இளைஞரின் வயது, சமூக பின்னணி மற்றும் குடும்ப பொறுப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு […]
சென்னை:பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாளையொட்டி 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 113 வது பிறந்த நாளையொட்டி 700 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக சட்டப் பேரவையில் கடந்த 13.09.2021 அன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். இந்நிலையில்,சிறைக் கைதிகளின் முன்விடுதலை நோடர்பான சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு,மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் 113 வது […]
கண்ணகி – முருகேசன் ஆணவக்கொலை விவகாரத்தில், ஒருவருக்கு தூக்கு தண்டனையும், மீதமுள்ள 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி, விருதாச்சலத்தில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த கண்ணகி – முருகேசன் ஆகிய இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்த நிலையில், உறவினர்களால் ஆணவக்கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், மூக்கு,காது வழியாக விஷத்தை ஊற்றி இரண்டு பேரையும் உயிருடன் எரித்ததாக வழக்கு தொடரப்பட்டது. […]
ஜெர்மனியில் 62 வயதுடைய முதியவர் செய்ய வேலையில்லாமல் தங்க இடமில்லாமல் இருந்துள்ளார்.இதனால் ஏதாவது செய்துவிடலாம் என்று விபத்து ஏற்படுத்தியுள்ளார். விபத்துக்குள்ளாகிய நபர் இறக்கவில்லையென்றாலும் இந்த முதியவரின் நிலையை உணர்ந்த நீதிபதி அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளார். ஜெர்மனியில் உள்ள மொஞ்சங்கடபெஸ் என்ற இடத்தில் வசித்து வந்தவர் எபெர்ஹார்ட் என்ற 62 வயதுடைய முன்னாள் அறிவியலாளர் ஆவார்.இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது வயதின் காரணமாக வேலையை இழந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் சும்மாவே இருந்ததால் கையில் சேமித்து […]