மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் 2 ஆண்டுகள் கடந்தும் இன்னும் பேசுபொருளாகவே உள்ளது. தமிழக அரசு சார்பில் சிபிசிஐடி போலீசார் 3 பேரை சுட்டிக்காட்டி இவர்கள் இச்செயலுக்கு காரணமானவர்கள் என கூறியுள்ளனர். அவர்கள் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என விசிக உள்ளிட்ட கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக வேங்கைவயல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்ற […]
சென்னை : இன்று (ஜனவரி 25) மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நடராசன் – தாளமுத்து ஆகியோரின் நினைவிடத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துக்களையும், அரசுக்கு தனது கோரிக்கைகளையும் முன்வைத்தார். வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் 3 பேர் மீது குற்றம் சாட்டி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி பேசிய திருமாவளவன், ” வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை […]
ரவுடி துரைசாமி : புதுக்கோட்டை மாவட்டத்தில் ரவுடி துரை என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். திருச்சி எம்.ஜி.ஆர் பகுதியை சேர்ந்த ரவுடி துரை மீது, கொலை, வழிப்பறி உள்ளிட்ட உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு, துரை மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால், அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக முயற்சி செய்துள்ளனர். அதன்படி, அவர் புதுக்கோட்டை திருவரங்குன்றம் தைலமர காட்டுப் பகுதியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த […]
சென்னை : பட்டாசு தயாரிக்கும் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த அத்திப்பள்ளத்தில் உள்ள பட்டாசு தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வெடி விபத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். இதில் உயிரிழந்தவர் கார்த்திக் என்ற இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. அதைப்போல, வெடிவிபத்தில் காயமடைந்தவர் பட்டாசு ஆலை உரிமையாளர் வேல்முருகன் எனவும் தெரியவந்துள்ளது. காயமடைந்த வேல்முருகன் தற்போது மணப்பாறை மருத்துவமனையில் […]
சென்னை : புதுக்கோட்டை கடல் வழியாக ரூ.10 கோடி மதிப்பில் தங்கம் கடத்தபட்டதாக 5 மீனவர்கள் கைது செய்ப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடல் வழியாக தங்க கடத்தல் நடைபெறுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பெயரில், சோதனை மேற்கொண்டதில், புதுக்கோட்டை கடற்கரை பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான, 13 கிலோ தங்கம் சிக்கியது. புதுக்கோட்டை மாவட்ட கடல்பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இந்த 10 […]
வடகிழக்கு பருவநிலை மீண்டும் தீவிரமடைய உள்ளதால் தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில், ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை உட்பட 18 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், […]
இறந்து விடுவார் என அறியப்பட்ட முதியவர் திடீரென உயிர்பிழைத்து பேசிய அதிசயம் புதுக்கோட்ட முரண்பட்டியில் நிகழ்ந்துள்ளது. ஒருவர் இறந்துவிடுவார் அல்லது இறந்துவிட்டார் என தவறுதலாக எண்ணி அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் வேளையில் திடீரென ஓர் அதிசயம் நிகழ்ந்து அவர்கள் எழுந்து விடுவார்கள். அப்படி ஒரு அதிசயம் அண்மையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முரண்டாம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம். இவர் உடல் நலகுறைவால் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்துள்ளார். அப்போது இவரின் உடல்நிலை […]
அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரை அலுவலகம் உள்பட 5 இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை. புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் பாண்டிதுரையின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பாண்டித்துரை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் இபிஎஸ் ஆதரவாளரான பாண்டித்துரை பல்வேறு ஒப்பந்தங்களை பெற்றிருந்தார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. நெடுஞ்சாலை […]
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பாண்டித்துரை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை. புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் பாண்டிதுரையின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பாண்டித்துரை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு ஒப்பந்தங்களை பெற்றவர் பாண்டித்துரை. நெடுஞ்சாலை […]
புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் கோவில் திருவிழா தொடர்பான வழக்கில், ‘ கடவுள் முன் அனைவரும் சமம். யாருக்கும் முதல்மரியாதை என்பது கிடையாது.’ என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கோவிலில் குறிப்பிட்ட சிலர் முதல் மரியாதை கேட்டு தகராறு செய்வதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில், குலமங்கலம் எனும் கிராமத்தில் உடையபராசக்தி அம்மன் கோயில் […]
குடும்பத்தில் நடந்த தகாத உறவை தட்டிக்கேட்ட சித்தப்பாவை, அப்பா மற்றும் உறவினருடன் அண்ணன் மகன் கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்பளித்துள்ள்ளது புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம். 2020இல் கொடூரமாக நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் இன்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் கொலை செய்யப்பட்டவரின் அண்ணன், அண்ணன் மகன், உறவினர் ஒருவர் என 3 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி அருகே […]
பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 24-ஆம் தேதி பணி நாள் என்றும் அன்று பள்ளி, கல்லூரிகள் […]
300 ஆண்டுகள் பாரம்பரியமிக்க புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-ஆவது மன்னரான ராஜகோபால தொண்டைமான் அவர்களின் 100-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.இதனால்,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மன்னரின் திருவுருவச்சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில்,புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக,தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் முதல்வர் […]
புதுக்கோட்டையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திற்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். புதுக்கோட்டை அருகே உள்ள குடுமியான்மலை எனும் பகுதியில் தனியார் குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த காப்பகத்தில் குழந்தைகளுக்காக வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பப்படுவதாகவும், ஆனால் இந்த பணத்தை பெற்றுக்கொண்ட காப்பக உரிமையாளர்கள் குழந்தைகளை முறையாக பராமரிக்கவில்லை எனவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்த காப்பகத்தை நடத்தி வந்த அரசு பள்ளி ஆசிரியை கலைமகள் மற்றும் அவரது கணவர் ராஜேந்திரன் […]
புதுக்கோட்டை அருகில் ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு, நீதிபதி இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே இருக்கும் மூலக்குடி என்ற பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்ற 27 வயது இளைஞர். இவர் அதே பகுதியை சேர்ந்த இவருடைய அண்ணன் முறை உறவினரின் ஏழு வயது மகளை பாலியல் கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இது […]
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் உள்ள குளத்தை காணவில்லை என அப்பகுதி இளைஞர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். வடிவேலு ஒரு படத்தில் கடன் வாங்கி வெட்டிய கிணற்றை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, அந்த இடத்திற்கு காவலர்களை அழைத்து சென்று காண்பித்து இருப்பார். இந்த காட்சி போலவே அண்மை காலங்களாக பல இடங்களில் தங்கள் பகுதியில் இருந்த நீர்நிலைகள் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல தற்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைந்துள்ள ஜல்லிக்கட்டு காளை சிலையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இரு தரப்பினர் மோதலை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். புதுக்கோட்டை போசம்பட்டியில் பகுதியில் முன்விரோத காரணாமாக ஒரே சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினர் மோதிக்கொண்டனர் அப்போது 2 பேர் காயம் என தகவல் வெளியாகிவுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் இரு தரப்பினர் சமாதானப்படுத்தி கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார. பின்னர் யாரும் களைந்து செல்லாததால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் என்று தெரிய வந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவிட்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க உள்ளதாகவும் முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவை சேர்ந்த ஏம்பல் எனும் கிராமத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி 7 வயது சிறுமி காணாமல் போனார். அவர் கடந்த 1ஆம் தேதி மாலை அப்பகுதியில் உள்ள ஊரணியில் […]