கடல் அரிப்பை தடுக்க 5 கோடி நிதி.! முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.!

கடல் அரிப்பை தடுக்கும் வகையில் பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கற்களை கொட்டுவதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

கடல் அரிப்பை தடுக்கும் வகையில் பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கற்களை கொட்டுவதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

மாண்டஸ் புயல் கரையை கடந்து வருவதன் காரணமாக வடதமிழகம் பகுதியில் காற்றின் வேகமும் மழையின் அளவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. புதுச்சேரி பகுதிகளில் கடல் சீற்றத்துடன் இருக்கிறது. மேலும், அப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பார்வையிட்டார். புதுச்சேரி கடற்கரை சாலை, பழைய துறைமுகம் பகுதியில் உள்ள கடற்கரையில் கடல் சீற்றம் குறித்து முதல்வர் நேரில் பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பிள்ளைச்சாவடி மீனவ கிராமம் பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதியை மாவட்ட ஆட்சியருடன் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை முதல்வர் ரங்கசாமி சந்தித்தார், கடல் அரிப்பை தடுக்கும் வகையில் பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கற்களை கொட்டுவதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், கடல் அரிப்பால் வீடுகளை இழந்தவர்கள்க்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.