புதுச்சேரி : 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய மண்ணைவிட்டு ஆங்கிலேயர்கள் சென்று இந்தியா விடுதலை பெற்ற தினமாகும். அதனால் ஆகஸ்ட் 15ஆம் தேதியை நாம் சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறோம். ஆனால் இந்த நாள் புதுச்சேரிக்கு மட்டும் மாறுபடும். நாம் ஆகஸ்ட் 15 கொண்டாடினால், அவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதி தேசிய கொடியேற்றுவர். மேலும் நவம்பர் 1ஆம் தேதியை ஆண்டு தோறும் சுதந்திர தினமாக கொண்டாவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பின்னால் சிறிய வரலாற்று […]
புதுச்சேரி பட்ஜெட் 2024 : மத்திய பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு இன்று யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 2024-2025 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இந்த பட்ஜெட்டை புதுச்சேரி நிதித்துறையை கையாளும் முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடிக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார். 2024 – 2025ஆம் நிதியாண்டிற்கான புதுச்சேரி பட்ஜெட்டிற்கு 12,700 […]
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என பல்வேறு கட்ட அரசியல் திருப்பங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தேசிய அளவில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க கடுமையாக வேலை செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக அசுர வளர்ச்சி கொண்டுள்ள பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் போராடி வருகிறது. முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி 3 வது நாளாக தீவிரம்..! இப்படியான சூழலில், புதுச்சேரியில் […]
ஆட்சியில் இருந்தும் ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஒரு சின்ன முடிவு எடுத்து அதனை செயல்படுத்த முடிவதில்லை. ஒவ்வொரு விஷயத்திற்கும் மத்திய அரசை எதிர்பார்த்து அனுமதி பெற வேண்டியதாக இருக்கிறது. – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. இன்று புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படையாக மேடையிலேயே வெளிப்படுத்திவிட்டார். அதுவும், மத்திய அமைச்சர் மற்றும் ஆளுநர் முன்னிலையிலேயே வெளிப்படுத்திவிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நிகழ்வில் முதல்வர் கூறுகையில், புதுச்சேரியை சிங்கப்பூர் மாதிரி மாற்ற […]
கடல் அரிப்பை தடுக்கும் வகையில் பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கற்களை கொட்டுவதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். மாண்டஸ் புயல் கரையை கடந்து வருவதன் காரணமாக வடதமிழகம் பகுதியில் காற்றின் வேகமும் மழையின் அளவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. புதுச்சேரி பகுதிகளில் கடல் சீற்றத்துடன் இருக்கிறது. மேலும், அப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பார்வையிட்டார். புதுச்சேரி கடற்கரை சாலை, பழைய துறைமுகம் பகுதியில் உள்ள கடற்கரையில் […]
புதுச்சேரியில் தியாகிகள் பென்சன் ரூ.9 ஆயிரத்திலிருந்து ரூ.10,000 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வருகிறது.அதன்படி,இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுச்சேரி முதல்வர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.அதன்படி, புதுச்சேரியில் தியாகிகள் பென்சன் ரூ.9 ஆயிரத்திலிருந்து ரூ.10,000 ஆயிரமாக உயர்த்தப்படும். பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தப்படும். ஆதிதிராவிட மற்றும் பட்டியலின மக்களின் ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.15 ஆயிரத்திலிருந்து […]