பேராசிரியர்கள் தேவை.. ஜூன் 18க்குள் விண்ணப்பிக்கலாம் – எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அறிவிப்பு
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவை என அறிவிப்பு.
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுரியில் 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர். அதன்படி, ENT, Anatomy, Biochemistry, General Surgery உள்ளிட்ட 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.
இதில், 20 பேராசிரியர்கள், 17 கூடுதல் பேராசிரியர்கள், 20 இணை பேராசிரியர்கள், 37 உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 94 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இடஒதுக்கீடு அடிப்படையில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளர்வர்கள் ஜூலை 18-ம் தேதிக்குள் http://jipmer.edu.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் பேராசிரியர்கள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் எய்ம்ஸ் கல்லூரியில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.