ஆதவ் அர்ஜுனா வேட்புமனு பரிசீலனையில் சிக்கல்!

சுயேட்சைகள் எதிர்ப்பு காரணமாக ஆதவ் அர்ஜூனாவின் வேட்பு மனு பரீசீலனை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Hero Image

சென்னை : வில்லிவாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் சிலர், ஆதவ் அர்ஜூனாவின் வேட்பு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை மனு தாக்கல் செய்தனர். அந்த ஆட்சேபனையில், ஆதவ் அர்ஜூனா தனது வேட்பு மனுவில் தனது மனைவி தொடர்புடைய 35 நிறுவனங்களை மறைத்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த மறைப்பு, வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்று சுயேட்சை வேட்பாளர்கள் வாதிட்டனர்.

இந்த ஆட்சேபனையை பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரி, ஆதவ் அர்ஜூனாவின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தப்பட்டது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால், வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் ஆதவ் அர்ஜூனா போட்டியிட முடியாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதே நேரத்தில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விஜய்யின் வேட்பு மனுவுக்கு எந்த ஆட்சேபனையும் எழுப்பப்படாததால், அவரது வேட்பாளர் நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆதவ் அர்ஜூனாவின் வேட்பு மனு நிறுத்தப்பட்ட சம்பவம், தவெகவுக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மனைவி பெயரில் உள்ள 35 நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் வேட்பு மனுவில் சரியாக குறிப்பிடப்படவில்லை என்பது தேர்தல் விதிமுறை மீறல் என்று கருதப்படுகிறது.தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வேட்பாளர்கள் தங்களுக்கும், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் சொந்தமான சொத்துகள், நிறுவனங்கள், கடன்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் முழுமையாகவும் துல்லியமாகவும் வெளிப்படுத்த வேண்டும்.

இந்த விவரங்களை மறைப்பது தேர்தல் சட்டத்துக்கு எதிரானது.இந்த சம்பவம் தொடர்பாக தவெக தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான பதில் வரவில்லை. வேட்பு மனு நிறுத்தப்பட்டதால், வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் புதிய வேட்பாளரை நியமிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஆதவ் அர்ஜுனா வேட்புமனு பரிசீலனையில் சிக்கல்!