பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையை பிரதமர் அறிவிக்க வாய்ப்பு – அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்

Governor Banwarilal Purohit did not reject the government's recommendation for the release of 7 people, including Perarivalan - Minister Mafa. Pandiyarajan

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வரிலால் புரோகித் நிராகரிக்கவில்லை – அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்

கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து, 7 பேர் விடுதலை செய்வதில் குடியரசு தலைவருக்கே அதிகாரம் உண்டு என்று நேற்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பான பரிந்துரையை சட்டத்திற்கு உட்பட்டு மத்திய அரசு பரிசீலிக்கும் என்று கூறப்பட்டது. 7 பேர் விடுதலை தொடர்பான ஆளுநரின் முடிவு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யபட்டது. பேரறிவாளன் முன்கூட்டியே விடுதலை செய்ய கோரும் மனுமீது விசாரணை வரும் 9ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்தார்.

இந்நிலையில், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வரிலால் புரோகித் நிராகரிக்கவில்லை என்று அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இதற்கு மாறாக குடியரசு தலைவர் வழியாக முடிவை அறிவிப்பார் என்றும் தமிழகம் வரும் பிரதமர் மோடி இதனை அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.