ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் செய்வதாக பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி கூறுகையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு வருவதற்கு முன்பே ஆளுநர்கள் செயலாற்றி இருக்க வேண்டும். ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரி மாநில […]
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநரை கூடுதல் பொறுப்பு வழங்கபட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மத்திய சில மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில், தமிழக ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் எனவும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகம் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் விளக்கம். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்தனர். இதில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த சந்திப்பானது சுமார் 45 நிமிடங்கள் நிகழ்ந்துள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி […]
சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து. நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளித்துள்ளார். இந்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்தார். டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ள நிலையில், ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை ஆளுநர் சந்திக்க உள்ளார். […]
டெல்லியில் பிரதமர் மோடியை நாளை மாலைசந்திக்க உள்ளார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். டெல்லியில் நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். தமிழகத்தின் அரசியல் சூழல், கொரோனா நிலவரம் உள்ளிட்டவை குறித்து பிரதமருடன் ஆளுநர் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று அதிமுக கூட்டணியில் உள்ள பாமக நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்ததை அடுத்து, சட்ட மசோதாவும் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு […]
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வரிலால் புரோகித் நிராகரிக்கவில்லை – அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து, 7 பேர் விடுதலை செய்வதில் குடியரசு தலைவருக்கே அதிகாரம் உண்டு என்று நேற்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது […]
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்வதில் குடியரசு தலைவருக்கே அதிகாரம் உண்டு என்று ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது. 7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையை சட்டத்திற்கு உட்பட்டு மத்திய அரசு பரிசீலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான ஆளுநரின் முடிவு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யபட்டது. பேரறிவாளன் முன்கூட்டியே விடுதலை செய்ய கோரும் மனுமீது விசாரணை வரும் 9-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. எழுவர் விடுதலையில் ஆளுநருக்கே அதிகாரம் […]
அரசின் சேவைகளை வீட்டில் இருந்தே பெற 1100 என்ற எண்ணிற்கு அழைத்தால் சேவைகளை விரைவில் பெற இயலும் என ஆளுநர் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ஆண்டின் முதல் கூட்டத்தொடரான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றிய பன்வரிலால் புரோகித், தமிழகத்தில் பொருளாதாரம் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு, பொருளாதாரம் புத்துயிர் பெறுவதாக தெரிவித்தார். அனைத்து மக்களுக்கும் படிப்படியாக தடுப்பூசி போடப்படும். தமிழகத்தில் இருமொழி கொள்கை தொடரும் எனவும் குறிப்பிட்டார். நிவர், புரெவி புயல் பாதிப்புகளுக்கு ரூ.5,264 கோடி […]
இதுதான் அரசின் ‘கடைசி’ பட்ஜெட் கூட்டத்தொடர் என்று ஆளுநர் கூறியதுதான் எனக்கு மிகவும் பிடித்தது ஒன்று என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய முக ஸ்டாலின், ஆளுநர் பேசியதில் எங்களுக்கு பிடித்தது என்னவென்றால், உட்காருங்கள் இந்த அரசாங்கத்தின் இதுதான் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் என்று தெரிவித்தார். […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்.5-ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில், பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் வரும் 5-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு நாளை பேரவையில் […]
7 பேரையும் விடுதலை செய்வதற்குத் தமிழக ஆளுநர் இன்று நள்ளிரவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் ஒருவாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம் முடிவுற்ற நிலையில், இதுதுகுறித்து ஆளுநர் நல்ல முடிவை […]
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை சந்தித்தோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சற்றுமுன் சந்தித்து பேசியுள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பேசப்படும் என்று தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை சந்தித்தோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நல்ல முடிவை எடுத்து 7 […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சற்று நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க உள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சற்று நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பேசப்படும் என்று தகவல் கூறப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு ஆளுநருக்கு அழைப்பு விடுக்க உள்ளார் முதல்வர். ஆளுநர் சந்திப்பு முடிந்து செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆளுநர் சந்திப்பில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் ஜெயக்குமார் சந்திக்கிறார் என்பது […]
தமிழ் வழியில் பயின்றோருக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வில் 20% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு டி.என்.பி.சி தேர்வில் 20 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். அரசுப்பணிகளில் தமிழ் வழியில் படித்தோருக்கான முன்னுரிமை இட ஒதுக்கீட்டு சட்டம் கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தில் சில திருத்தங்கள் மட்டும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்டது. ஆனால், […]
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி இன்று மாலை சந்திக்கவிருந்த நிலையில், திடீரென அந்த சந்திப்பு ரத்தானது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், 7 பேர் விடுதலைக்கு ஒப்புதல் கேட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதற்கு ஆளுநர் காத்து வருவதால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை 5 மணிக்கு சந்தித்து பேசவிருந்தார். […]
சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து பேசுகிறார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றது. இதன் காரணமாக 7 விடுதலைக்கு ஒப்புதல் கேட்டு தமிழக அரசு கோப்புகளை சமர்ப்பித்த நிலையில், ஆளுநர் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வருகிறார். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை […]
7 பேர் விடுதலை குறித்து மனிதநேய கட்சியின் பொது செயலாளர் தமீமுன் அன்சாரியின் அதிரடி பேச்சு. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யபட்ட 7 பேரின் விடுதலை குறித்து பல தலைவர்களும், பொதுமக்களும் விடுதலை செய்யுமாறு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நாகையில், செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய மனிதநேய கட்சியின் பொது செயலாளர் தமீமுன் அன்சாரி, உச்சநீதிமன்றம் அளித்த கருத்தின்படி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கும், பன்னோக்கு விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கைக்கும், […]
பிரதமர் மோடியை இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் சந்திக்கிறார். சென்னையில் நேற்று ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் இன்று திடீரென சந்தித்தார். அப்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இன்று காலை விமானம் மூலம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் இருந்து டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். தற்போது, டெல்லி […]