விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம்… பிரேமலதா கண்ணீர் மல்க அஞ்சலி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ன் நினைவு தினத்தை ஒட்டி, கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில், அமைச்சர் சேகர் பாபு, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Vijayakanth -DMDK

சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இதையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்று வருகிறது. 

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி, கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் சேகர் பாபு, அண்ணாமலை, ஓபிஎஸ் உட்பட பலர் மரியாதை செலுத்தினர். மேலும், பிரேமலதா கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, போலீசார் தடையை மீறி தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில், மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்திலிருந்து, விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது. பேரணி விஜயகாந்த் நினைவிடம் வந்தடைந்த பின், விஜயகாந்த் சிலை முன் நின்று தேமுதிக தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

இதற்கிடையில், விஜயகாந்த் நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு அதிகாலை முதலே மரியாதை செலுத்தி வருகிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் அடுத்தடுத்த அரசியல் தலைவர்கள் வருகை புரிந்து, விஜயகாந்துக்கு மரியாதை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்