சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில், மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்திலிருந்து, விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது. இந்த அமைதி பேரணிக்கு காவல்துறை தரப்பில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறி அனுமதி கொடுக்க மறுக்கப்பட்டதால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர். இருந்தாலும், தடைகள் மீறி நினைவிடம் வரை பேரணி […]
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இதையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்று வருகிறது. விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி, கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் சேகர் பாபு, அண்ணாமலை, ஓபிஎஸ் உட்பட பலர் மரியாதை செலுத்தினர். மேலும், பிரேமலதா கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். முன்னதாக, போலீசார் தடையை மீறி […]
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு அதிகாலை முதலே மரியாதை செலுத்தி வருகிறார்கள். விஜயகாந்த் நினைவு தினத்தை குரு பூஜையாக கடைப்பிடிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை கோயம்பேடு நினைவிடத்தில் இன்று காலை 9.30 மணிக்கு குரு பூஜை நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக, தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில், மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்திலிருந்து, விஜயகாந்த் நினைவிடம் […]
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ‘விஜயகாந்த்’ மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில், அதிகாலை முதலே நீண்ட வரிசையில் கேப்டன் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு மரியாதை செலுத்தி வருகிறார்கள். விஜயகாந்த் நினைவு தினத்தை குரு பூஜையாக கடைப்பிடிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது. இவ்விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், விஜய் ஆகியோருக்கு […]
சென்னை : கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியிலிருந்த மருத்துவரை விக்னேஷ் எனும் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை […]
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக தேமுதிக உயர்மட்ட குழுக்கள் தீவிர ஆலோசனை செய்து வருகிறது. இதில் ஒரு பங்காக இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டமானது சென்னையில் உள்ள கோயம்பேட்டில் நடந்தது. இதில் முக்கியமான 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அந்த 10 தீர்மானங்கள் என்னெவென்றால் …, தமிழகம் முழுவதும் உள்ள நமது கழகத்தினரும், பொதுமக்களும் ஒன்று […]
சென்னை : இன்று தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், மின் சாரக்கட்டணம் உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், தமிழக மக்களுக்காக கேப்டன் கொண்ட லட்சியத்தை நிறைவேற்றிட வேண்டும் என உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பொதுச்செயலாளர் பிரேமலதா அதிமுகவுடனான கூட்டணி குறித்தும் தேமுதிக மாநாடு நடத்துவது பற்றித் திட்டமிட்டது குறித்தும் பேசியுள்ளார். இது குறித்துப் பேசிய […]
சென்னை : கடந்த அக்டோபர் 27-ம் தேதியன்று தவெகவின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார் அக்கட்சி தலைவர் விஜய். அப்போது, கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விசிகாவின் கோரிக்கையை ஆதரிக்கும் வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த கருத்துக்கு முதலில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆதரவு தெரிவித்து இருந்தாலும், அடுத்தடுத்து விசிக தலைவர் திருமாவளவன், மற்ற விசிக தலைவர்கள் இதனை கடுமையாக விமர்சித்தனர். ஆஃபர் கூறுவது போல இருக்கிறது. முதலில் […]
சென்னை : விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில், தேமுதிக நிர்வாகி வெங்கடேசன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. நெற்றியை தினம், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாளை தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தேமுதிகவினர் கொண்டாடினர். அவரது நினைவாக கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்தில், அவரது முழு உருவச் சிலையை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்துவைத்தார். இதனிடையே, கடலூரில் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் தேமுதிக நிர்வாகி வெங்கடேசன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் […]
கடலூர் : தேமுதிக கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் பாய்ந்து தேமுதிக நிர்வாகி பலியானார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தேமுதிகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விஜயகாந்தின் உருவச்சிலை திறப்பு சிலையை திறந்து வைத்தார். இதனிடையே, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் […]
சென்னை : விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவில் திடீரென மயக்கமடைந்த சண்முக பாண்டியன் கீழே விழுந்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உருவச்சிலை திறப்பு விழா நடந்தது. இதில், விஜயகாந்தின் இளைய மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் உருச் சிலை திறப்பு விழாவின் போது, நிர்வாகிகள் அலைமோதியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த கூட்ட […]
சென்னை : மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி, தேமுதிக தலைமை அலுவகலத்தில் அவரது உருவ சிலையை திறந்து வைத்தார் பிரேமலதா விஜயகாந்த். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று. மதுரையில், ஆகஸ்ட் 25, 1952ம் ஆண்டு அழகர்சாமி-ஆண்டாள் தம்பதிக்கு பிறந்த அவர், தமிழ் சினிமாவின் கேப்டனாக பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். அதுமட்டுமின்றி அரசியலிலும் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி கருப்பு எம்ஜிஆர் என பெயரெடுத்தவர். குறிப்பாக, அனைவருக்கும் பசியாற்றும் குணம் கொண்ட அவரது புகழ், […]
சென்னை : நடிகர் விஜய் உடனான சந்திப்பு குறித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார். மறைந்த கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் விஜயகாந்த் உருவத்தை கையில் ‘டாட்டூ’ போடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை பார்வையிட்டார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, விஜய் உடனான சந்திப்பு குறித்தும், தவக கட்சியின் கொடி […]
விஜயகாந்த் : மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உருவத்தை AI- தொழிநுட்பம் மூலம் புது படங்களில் இயக்குனர்கள் கொண்டு வர முயற்சி செய்து வருவதாக தகவல்கள் ஒரு பக்கம் வைரலாகி கொண்டு இருக்கிறது. குறிப்பாக, விஜய் நடித்து வரும் ‘கோட்’ மற்றும் விஜயகாந்த் மகன் நடித்துள்ள ‘படைத்தலைவன்’ ஆகிய படங்களில் விஜயகாந்த் AI-மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், திரைப்படங்களில் AI தொழில்நுட்பம் மூலம் கேப்டன் விஜயகாந்தின் உருவத்தை பயன்படுத்த இதுவரை யாரும் எந்த […]
விக்கிரவாண்டி : இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்து இருக்கிறார். விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் வருகின்ற ஜூலை மாதம் 10 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் பெயர் கட்சி சார்ப்பில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடவுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதைப்போல, நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா (இளங்கலை சித்த […]
விருதுநகர்: தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆதரவுடன் விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக விஜயகாந்த் மகன் விஜயப்ரபாகரன் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார். தேர்தல் முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகள் பெற்றார். தே.மு.தி.க வேட்பாளர் விஜயபிரபாகரன் 3,80,877 வாக்குகள் பெற்று இருந்தார். இந்த நிலையில் தான் , வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் இன்று […]
மக்களவைத் தேர்தல் : தமிழ்நாடு விருதுநகரில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், 4,379 வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். அதேபோல், போட்டியிட்ட மேலும் 4 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியடைந்தது. இந்நிலையில், தோல்வி குறித்து அறிக்கை வெளியிட்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, “அரசியலில் வெற்றி தோல்வி சகஜம், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, கடைசிவரை வீரமாகப் போராடி களத்தில் சரித்திரம் படைக்கும் அளவில் நாம் போட்டியிட்டு இருக்கிறோம். தோல்வியை படிக்கல்லாக மாற்றி 2026 தேர்தலில் வெற்றி காண கடுமையாக […]
விஜய் பிரபாகரன் : நாடுளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்றைய நாள் தொடங்கப்பட்டு நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக மக்களவை தொகுதிகளான 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே கைப்பற்றி உள்ளது. அதில் மக்களவை தொகுதியான விருதுநகரில் நேற்று நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்றது. தொடக்கத்தில் முன்னிலையில் இருந்து வந்த விஜய் பிரபாகரன் இறுதியில், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளரான மாணிக்கம் தாகூரிடம் (3,85,256) 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக […]
மக்களவை தேர்தல் : தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் தருமபுரி தொகுதியில், பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 100174 வாக்குகள் பெற்று 15369 முன்னிலையில் வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். அதற்கு அடுத்தபடியாக, திமுக வேட்பாளர் மணி 84805 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் அசோகன் 69710 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
மக்களவை தேர்தல்: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகளில் திமுக முன்னிலை வகுக்கிறது. விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 46500 வாக்குகள் பெற்று 2149 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அதற்கு அடுத்தபடியாக, மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) – 44351வாக்குகளும், ராதிகா சரத்குமார் (பாஜக)18185 வாக்குகளும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.