#BREAKING: பொங்கல் பரிசு வாங்க கால அவகாசம் ஜன, 25 வரை நீட்டிப்பு..!

The deadline for receiving the Pongal gift package and Pongal cash has been announced as January 13, which has now been extended.

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்க தொகை 25-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் தமிழக அரசு அறிவிப்பு.

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்க தொகையை பெற ஜனவரி 13-ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பொங்கல் பரிசு தொகுப்பை பெற அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்க தொகையை விடுபட்டவர்களுக்கு ஜனவரி 18-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவித்தார். ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.