பொங்கல் பரிசுத் தொகுப்பை நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் சேர்த்து ரூ.1000 ரொக்க பணம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்பொழுது […]
ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீட்டு இருக்கிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3000 வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை […]
புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதி முதல் வங்கிக் கணக்கில் பொங்கல் பணம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த பரிசு தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு நபர் கொண்ட ரேஷன் அட்டைகளுக்கு ரூ.500 என்றும், இரண்டுக்கு மேற்பட்டோர் உள்ள குடும்பங்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் 1,30,791 குடும்பங்கள் பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு இலவச […]
பொங்கல் பரிசு தொகுப்பு தரம் குறைப்பாடு தொடர்பாக முதுநிலை அதிகாரியை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு நடவடிக்கை. பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக் கட்டுப்பாட்டு மேலாளரை பணியிடைநீக்கம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்ட பொங்கல் சிறப்பு தொகுப்பில், சில இடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களின் தரத்தை உறுதி செய்வதில் […]
பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழ காரணமாக இருந்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் உத்தரவு. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசுத் தொகுப்பு ரூ.1,297 கோடி மதிப்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த பொங்கல் தொகுப்பு தரமற்றதாக வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தது. பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்ததில் பல்வேறு புகார்கள் எழுந்து […]
குடும்ப அட்டைதாரர்களுக்கு நேர்மையான முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது என்று அமைச்சர் விளக்கம். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, திமுக ஆட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நேர்மையான முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பொய் பரப்புரை மக்கள் மன்றத்தில் தோற்கும். திமுக ஆட்சியில் வழங்கபட்டு வந்த பொங்கல் பரிசு தொகுப்பு அதிமுக ஆட்சியில் […]
அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல். மக்கள் அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு பொருட்கள் கிடைப்பது குறித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அமைச்சர்கள், எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், இந்த பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுவதை நானே நேரடியாக […]
பொங்கல் தொகுப்பில் ஏதேனும் தவறு அல்லது முறைகேடு குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்ணை வெளியிட்ட அமைச்சர் சக்கரபாணி. தமிழர் திருநாளான தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருட்கள் […]
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான தேதி ஜனவரி 31 வரை நீட்டித்து தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பச்சரிசி, வெல்லம், நெய் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புவழங்குகிறது. இந்த பொங்கல் தொகுப்பினை சமீபத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கிடையில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் […]
புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு. 2022-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளன. இந்நிலையில், புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு […]
விவசாயிகளிடம் நேரடி கரும்பு கொள்முதல் செய்வதற்கான முக்கிய விதிகளை வெளியிட்டது கூட்டுறவுத்துறை. கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பொங்கலுக்கான கரும்பினை நேரடியாக விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 2022-ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புடன், கரும்பும் சேர்த்து வழங்க தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கரும்பு […]
21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் பொங்கல் சிறப்பு தொகுத்து வழங்கப்பட உள்ளன. பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராச்சை, ஏலக்காய், நெய், கரும்பு போன்ற […]
மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றியிருந்த ரொக்கத் தொகை என்ற வார்த்தை நீக்கம். 2022-ம் ஆண்டு தமிழர் திருநாளான தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க தமிழக அரசு அறிவித்திருந்தது. பொங்கல் தொகுப்பை 2 கோடியே 15 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் வழங்க அரசு உத்தரவிட்டதை […]
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்க தொகை 25-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் தமிழக அரசு அறிவிப்பு. பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்க தொகையை பெற ஜனவரி 13-ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பொங்கல் பரிசு தொகுப்பை பெற அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்க தொகையை விடுபட்டவர்களுக்கு ஜனவரி 18-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில், இதுவரை 94.71% சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாதவர்ககளுக்கு, அவரவர் ரேஷன் கடைகளில் இருந்து பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளுமாறு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் கடந்த 9-ம் தேதியில் இருந்து குடும்ப அட்டை ஒன்றுக்கு, ரூ.1000 ரொக்கமும், 1கி பச்சரிசி, சர்க்கரை, கரும்புத்துண்டு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. […]
பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்திற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி முதலமைச்சர் பழனிசாமி கடந்த நவம்பா் மாதம் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தாா்.அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்றும் இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.அதில், 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை,2 அடி துண்டு கரும்பு,20 […]
பொங்கல் பரிசு வழங்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது. தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த நவம்பா் 29-ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா். தமிழகத்தில் 2.05 கோடி அரிசி வாங்கும் குடும்பங்களுக்கு […]
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து வருகிறார். இன்று ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது , தமிழகத்தில் பொங்கல் இலவச பரிசு பொருட்கள் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துத்தது புதுச்சேரி மாநிலத்திற்கும் பொருந்தும் என்று தெரிவித்தார்.
வருடந்தோறும் பொங்கல் தினத்தை முன்னிட்டு எபபோதும் போல் முதலமைச்சர் சார்பில் பொங்கல் பரிசு திட்டம் அறிவிக்கபட்டது. இந்த பொங்கல் பரிசு ஜனவரி 5 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். இந்த பொங்கல் பரிசு தொகுப்பில், 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி, 20 கிராம் ஏலக்காய், 20 கிராம் உலர் திராட்சை, 2 அடி கரும்பு ஆகியவை அதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,84,00,000 குடும்ப அட்டைதார்கள் பயன் பெறுவார்கள் என […]
வருடாவருடம் பொங்கல் பண்டிகை பண்டிகையின் போது பொதுமக்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசாக பச்சரிசி, அச்சுவெல்லம், கரும்பு போன்றவை கொடுக்கப்படும் அதுபோல இந்த வருடமும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின் படி, வருடாவருடம் பொங்கல் பரிசு கொடுப்பது போல பச்சரிசி, சர்க்கரை, 2 அடி நீள கரும்பு உளிட்ட பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும், இதன் மூலம், 1,84,00,000 குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெறுவார்கள் ஏன முதல்வர் தெரிவிக்கப்பட்டது. source : […]