இளைஞரை சுட்டுக்கொன்ற சம்பவம் – 4 பேரை கைது செய்த காவல்துறை!

IG Anbu reports that 4 people have been arrested in connection with the incident where a youth was shot dead in Dindigul.

திண்டுக்கல்லில் இளைஞரை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது என ஐஜி அன்பு தகவல்.

திண்டுக்கல் மாலபட்டி அருகே ராகேஷ் (வயது 26) என்பவர்  மீன் பிடிப்பதற்காக குத்தகைக்கு எடுத்த செட்டி குளத்தை காவல் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் அவரை சுட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் ராகேஷின் உடலில் ஆறு இடங்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளது. இதன்பின் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து, குளத்தை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தது. தப்பிய நபர்களை திண்டுக்கல் காவல் துறை தீவிரமாக தேடி வந்தது. இந்த நிலையில், திண்டுக்கல்லில் ராகேஷ் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐஜி அன்பு தெரிவித்துள்ளார்.

சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதான பிரகாஷ், கணேச மூர்த்தி, ஜான் சூர்யா, மரியா பிரபுவிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செட்டிகுளம் குளத்தை குத்தைகைக்கு எடுத்து மீன் பிடிப்பது தொடர்பான முன்பகையால் ராகேஷ் கொலை செய்யப்பட்டதாக ஐஜி அன்பு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.