சென்னை :பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) கௌரவத் தலைவரும், சட்டமன்றக் குழுத் தலைவருமான ஜி.கே. மணி, நெஞ்சுவலி மற்றும் முதுகு தண்டு வலி காரணமாக சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் அவரின் உடல்நிலை குறித்த மெடிக்கல் ரிப்போர்ட், இன்று மதியத்திற்கு மேல் அப்போலோ தரப்பில் வெளியிடப்படும் என தெரிகிறது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆகியோர் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.
