சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன் அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில நாள்களுக்கு முன் கீழே விழுந்ததில், அவருக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. வலது தோள்பட்டையில் ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அந்த அறுவை சிகிச்சையின் போது வைக்கப்பட்ட பிளேட்டை அகற்ற மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட்டு 11,900 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.இவர் கடந்த அதிமுக ஆட்சியில் 5 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்,மேலும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வயிற்று வலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது […]
டெல்லி அப்போலோ மருத்துவமனை மீது நோயாளியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதி பற்றாக்குறை எழுந்துள்ளது. அதிலும், குறிப்பாக டெல்லி மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதி அதிகம் பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில், டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளிக்கு ஐ.சி.யு […]
நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் தேதி குறித்து மருத்துவமனை இன்று முடிவு செய்யவுள்ளது. ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் முடிவுகளில் அச்சப்படும் வகையில் எதுவுமில்லை எனவும், ரஜினிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எளினும் ரஜினியை முழு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். […]
ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளில் அச்சப்படும் வகையில் எதுவுமில்லை, ரஜினிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது உடல் நிலை சீராக உள்ளது. ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் முழு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஜினிக்கு மேலும் சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளதால் நாளை காலை முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ரஜினி ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு […]
உச்சநீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது. அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் […]